முன்னாள் கேப்டன், தேர்வாளர் தலைவர், சிறப்பான வீரர் வெங்சர்க்காருக்கு பிறந்தநாள்... பிசிசிஐ வாழ்த்து
டெல்லி : முன்னாள் இந்திய அணியின் கேப்டன் மற்றும் முன்னாள் தேர்வாளர்கள் தலைவர் திலிப் வெங்சர்க்காரின் பிறந்தநாள் இன்று.
தன்னுடைய கேரியரில் உலக கோப்பை வெற்றிக் கூட்டணியில் இருந்த வெங்சர்க்காரின் பிறந்தநாளையொட்டி பிசிசிஐ அவருக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.

வெங்சர்க்கார் தன்னுடைய கேரியரில் 245 சர்வதேச போட்டிகளில் விளையாடி 10,376 சர்வதேச ரன்களை குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த 1983ல் உலக கோப்பை தொடரில் விளையாடிய இந்திய அணியில் இடம்பெற்று சிறப்பான போட்டிகளை அளித்தவர் திலிப் வெங்சர்க்கார். முன்னாள் இந்திய அணியின் கேப்டனாகவும் முன்னாள் தேர்வாளர்கள் தலைவராகவும் சிறப்பான வகையில் செயல்புரிந்தவர் இவர். சிறப்பான பேட்ஸ்மேனாகவும் இந்திய அணியில் வலம்வந்தவர்.
சர்வதேச அளவில் 245 போட்டிகளில் விளையாடியுள்ள வெங்சர்க்கார், 10,376 ரன்களை குவித்துள்ளார். இந்நிலையில் இன்றைய தினம் தனது 65வது பிறந்தநாளை வெங்சர்க்கார் கொண்டாடி வருகிறார். இதையொட்டி பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications