
முனாப் பட்டேல் திட்டினார்
கடந்த 2006ஆம் ஆண்டு இந்தியா - இங்கிலாந்து இடையே மும்பையில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் முனாப் பட்டேல், இங்கிலாந்து வீரர் ஓவைஸ் ஷாவை ஹிந்தியில் உள்ள கெட்ட வார்த்தையில் திட்டினார்.

ஹிந்தி தெரியாது
அருகே அம்பயர் சைமன் டாஃபல் நின்று இருந்தார். அவருக்கு ஹிந்தி தெரியாது என நினைத்தே முனாப் படேல் தைரியமாக ஹிந்தியில் கெட்ட வார்த்தையை பயன்படுத்தினார். ஆனால், சைமன் டாஃபல் அதை அப்போது கண்டுபிடித்தார்.

அது என்ன வார்த்தை?
அது பற்றி மாணவர்கள் இடையே பேசிய போது குறிப்பிட்ட சைமன் டாஃபல், அந்த வீடியோவை போட்டுக் காட்டி, அது என்ன கெட்ட வார்த்தை என்பதையும் ஹிந்தியில் குறிப்பிட்டு கூறினார்.

கெட்ட வார்த்தைகள்
பின்னர், மாணவர்களிடம், "கிரிக்கெட் அம்பயராக நான் உள்ளூர் மொழிகளில் உள்ள நல்ல வார்த்தைகளை கற்றுக் கொள்ள வேண்டும் என தெரிந்து கொண்டேன். ஆனால், இப்போது எனக்கு ஏழு மொழிகளில் உள்ள கெட்ட வார்த்தைகள் தெரியும். அது பலமுறை எனக்கு களத்தில் நடந்த சம்பவங்களின் போது உதவியுள்ளது" என்றார்

அடிப்படை
தான் எப்படி தன் வேலைக்காக பல மொழிகளில் உள்ள கெட்ட வார்த்தைகளையும் கற்றுக் கொள்ள நேர்ந்ததோ, அதே போல மாணவர்களும் தங்கள் எதிர்காலத்துக்கு தேவையான அடிப்படைகளை கற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்கே இதை உதாரணமாக கூறினார் சைமன் டாஃபல்.

சைமன் டாஃபல் சாதனை
சைமன் டாஃபல் 1999 முதல் 2012 வரை அம்பயராக இருந்து ஓய்வு பெற்றார். தான் பணியாற்றிய காலத்தில் தொடர்ந்து ஐந்து வருடங்களில் ஐசிசி சிறந்த அம்பயர் விருதை வென்றார். 74 டெஸ்ட் போட்டிகள், 104 ஒருநாள் போட்டிகள் மற்றும் 34 டி20 போட்டிகளுக்கு அம்பயராக பணியாற்றி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications