Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எப்படி இவ்ளோ ஸ்லோவா டபுள் செஞ்சுரி அடிச்சீங்க? இங்கிலாந்து கேப்டனை கலாய்த்த முன்னாள் வீரர்!

நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் இரட்டை சதத்தை அடித்துள்ளார். அவர் 441 பந்துகளில் 226 ரன்களை குவித்துள்ளார்.

இந்நிலையில், மேற்கிந்திய தீவுகளின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிடல் எட்வர்ட்ஸ், ஜோ ரூட்டின் ஆட்டம் மிகவும் வேகம் குறைந்து காணப்பட்டதாக விமர்சித்துள்ளார்.

நியூசிலாந்திற்கு எதிராக அவர்களது மண்ணில் விளையாடி இரட்டை சதம் அடித்த முதல் கேப்டன் என்ற பெருமையை ஜோ ரூட் பெற்றுள்ளார். ஆயினும் இத்தகைய விமர்சனங்களையும் அவர் அதிகளவில் எதிர்கொண்டுள்ளார்.

 மழையால் பாதிப்பு -டிராவில் முடிந்த போட்டி

மழையால் பாதிப்பு -டிராவில் முடிந்த போட்டி

இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டு டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடரின் இரண்டாவது போட்டி மழையால் பாதிப்படைந்து டிராவில் முடிவடைந்தது.

 முதல் டெஸ்ட்டில் நியூசிலாந்து வெற்றி

முதல் டெஸ்ட்டில் நியூசிலாந்து வெற்றி

ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், மவுண்ட் மாங்கானுவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இன்னிங்க்ஸ் மற்றும் 65 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்றது.

 மழையால் டிராவில் முடிந்த போட்டி

மழையால் டிராவில் முடிந்த போட்டி

இந்நிலையில் இந்த இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி ஹாமில்டனில் நடைபெற்றது. கடந்த 29ம் தேதி துவங்கிய இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் நியூசிலாந்தின் 375 ரன்களை இலக்காக கொண்டு இங்கிலாந்து அணி ஆடி 476 ரன்களை குவித்தது.ஆயினும் போட்டி மழை காரணமாக டிராவில் முடிந்துள்ளது.

 விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்

இந்த போட்டியில் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் இரட்டை சதம் அடித்திருந்த போதிலும், அவரது முயற்சி விழலுக்கு இறைத்த நீராகவே இருந்தது. அவர் மிகவும் மெதுவாக அதிக பந்துகளை வீணடித்து தன்னுடைய 226 ரன்களை அடித்ததாக பல்வேறு தரப்பினரும் விமர்சித்திருந்தனர்.

 அந்நிய மண்ணில் இரட்டை சதம்

அந்நிய மண்ணில் இரட்டை சதம்

நியூசிலாந்திற்கு திராக இரட்டை சதம் அடித்ததன்மூலம் நியூசிலாந்தில் முதன் முதலில் இரட்டைச் சதம் அடித்த இங்கிலாந்து கேப்டன் என்ற பெருமையை ஜோ ரூட் பெற்றுள்ளார். இதேபோல அந்நிய மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் இரட்டை சதம் அடித்த நான்காவது இங்கிலாந்து கேப்டன் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்துள்ளது.

"எப்படி மோசமா ஆடுனீங்க?"

இந்நிலையில் மேற்கிதிந்திய தீவுகள் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிடல் எட்வர்ட்ஸ் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்டின் ஆட்டத்தை விமர்சித்துள்ளார். அவர் மிகவும் மெதுவாக ஆடியதாக தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் எட்வர்ட்ஸ் குறிப்பிட்டுள்ளார்

 இரண்டாவது போட்டி டிரா

இரண்டாவது போட்டி டிரா

மழை காரணமாக இரண்டாவது போட்டி டிராவில் முடிந்தாலும் முதல் போட்டியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி, இந்த தொடரை வெற்றி கொண்டுள்ளது.

Story first published: Tuesday, December 3, 2019, 17:32 [IST]
Other articles published on Dec 3, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+