Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அவரெல்லாம் வேற லெவல்... அவரோட ஆடுறது என்னோட அதிர்ஷ்டம்... வில்லியம்சன்

வெல்லிங்டன் : விராட் கோலியுடன் தான் இணைந்து ஆடியது தன்னுடைய அதிர்ஷ்டம் என்று நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் கனெக்டட் நிகழ்ச்சிக்காக பேசிய கேன் வில்லியம்சன், தான் அன்டர் 19 தொடரிலிருந்தே விராட்டுடன் பயணித்து வருவதாகவும் அவரின் திறமை, பயணத்தை தொடர்ந்து பார்த்து வருவதாகவும் கூறியுள்ளார்.

கடந்த 2008ல் அன்டர் 19 உலக கோப்பை தொடரில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியை வெற்றி கொண்டது குறிப்பிடத்தக்கது.

நியூசிலாந்தை வெற்றி கொண்ட இந்தியா

நியூசிலாந்தை வெற்றி கொண்ட இந்தியா

கடந்த 2008ல் அன்டர் 19 ஐசிசி உலக கோப்பை தொடரில் விராட் கோலி தலைமையிலான இந்திய அன்டர் 19 அணி, கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியை அரையிறுதியில் வெற்றி கொண்டது. மலேசியாவில் நடைபெற்ற இந்த தொடரில் ரவீந்திர ஜடேஜா, ட்ரெண்ட் போல்ட் மற்றும் டிம் சௌதி போன்ற வீரர்களும் இடம்பெற்றிருந்தனர்.

விராட் குறித்து வில்லியம்சன்

விராட் குறித்து வில்லியம்சன்

இந்நிலையில் விராட் கோலியின் திறமை மற்றும் பயணத்தை சிறு வயதிலிருந்தே தொடர்ந்து பார்த்து வருவதாகவும், விராட் கோலியுடன் இணைந்து தொடர்ந்து விளையாடி வருவது தன்னுடைய அதிர்ஷ்டம் என்றும் கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார். கிரிக்கெட் கனெக்டட் நிகழ்ச்சிக்காக பேசிய கேன் வில்லியம்சன் இவ்வாறு கூறியுள்ளார்.

கோலியுடனான சந்திப்பு சிறப்பானது

கோலியுடனான சந்திப்பு சிறப்பானது

அன்டர் 19 உலக கோப்பை தொடரில் விளையாடிய விராட் கோலி மற்றும் கேன் வில்லியம்சன் இருவருமே இந்த நவீன கிரிக்கெட் உலகின் pசறந்த வீரர்களாக விளங்குகின்றனர். இதனிடையே இளம் வயதிலேயே விராட் கோலியை சந்தித்தது மிகவும் சிறப்பானது என்று வில்லியம்சன் கூறியுள்ளார். கடந்த ஆண்டு உலக கோப்பை தொடரில் இந்தியாவை நியூசிலாந்து அரையிறுதியில் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

போட்டிகளில் வித்தியாசம்

போட்டிகளில் வித்தியாசம்

நாங்கள் இருவரும் ஒருவருக்கு ஒருவர் எதிரணிகளில் நீண்ட காலங்களாக விளையாடிவருவது மிகவும் சிறப்பானது என்றும் கேன் வில்லியம்சன் கூறியுள்ளார். மேலும் கடந்த ஆண்டுகளில் தாங்கள் இருவரும் பல விஷயங்கள் குறித்து பகிர்ந்து வருவதாகவும், போட்டிகளில் வித்தியாசத்தை காண்பிக்கும்வகையில் தங்களது கருத்துக்கள் காணப்படும் என்றும் வில்லியம்சன் மேலும் தெரிவித்துள்ளார்.

Story first published: Sunday, June 7, 2020, 20:45 [IST]
Other articles published on Jun 7, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+