Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐசிசி தரவரிசை... வரிசை கட்டிய நேபாளம், யுஏஇ, ஸ்காட்லாந்து, நெதர்லாந்து!

Recommended Video

ஐசிசி ஒருதினப் போட்டி தரவரிசையில் இணைந்த நேபாளம், யுஏஇ- வீடியோ

டெல்லி: ஐசிசி ஒருதினப் போட்டி தரவரிசையில் ஏற்கனவே உள்ள 12 நாடுகளுடன் நேபாளம், யுஏஇ, ஸ்காட்லாந்து, நெதர்லாந்து ஆகியவையும் இணைந்துள்ளன.

ஒருதினப் போட்டிகளில் விளையாடும் நாடுகளை ஐசிசி தரவரிசைப்படுத்தி வருகிறது. இதுவரை 12 நாடுகள் இந்தப் பட்டியலில் இருந்தன. 2018 ஜூன் 1 முதல் மேலும் சில நாடுகள் இணையும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, இன்று வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் நேபாளம், யுஏஇ, நெதர்லாந்து, ஸ்காட்லாந்து ஆகியவையும் ஐசிசி தரவரிசையில் இடம்பெற்றுள்ளன.

four nations joins icc odi ranking

இதன் மூலம், இந்த நான்கு அணிகள் இனி விளையாடும் அனைத்து ஆட்டங்களுக்கும் மதிப்பெண் வழங்கப்பட்டு, தரவரிசையில் இடம்பெறும். தற்போதைய நிலையில் ஸ்காட்லாந்து 28 புள்ளிகளுடன் 13வது இடத்தைப் பிடித்துள்ளது. யுஏஇ 18 புள்ளிகளுடன் 14வது இடத்தில் உள்ளது.

நெதர்லாந்து 13 புள்ளிகளும், நேபாளம் 0 புள்ளிகளும் பெற்றுள்ளன. அதனால் தரவரிசை பட்டியலில் தற்போதைக்கு இடம்பெறவில்லை. அடுத்து விளையாடும் ஆட்டங்களுக்கு ஏற்ப, அடுத்தப் பட்டியலில் முன்னேறும் வாய்ப்பு உள்ளது.

இந்த அணிகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளதால், ஏற்கனவே உள்ள அணிகளுக்கான தரவரிசையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. இங்கிலாந்து முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும் உள்ளன.

Story first published: Friday, June 1, 2018, 13:05 [IST]
Other articles published on Jun 1, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+