Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆசிய கோப்பையில் மிரட்டலான 4 போர்களம்.. பேட்ஸ்மேன் Vs பந்துவீச்சாளர்கள்.. யார் வெல்வார்கள்?

துபாய்: ஆசிய கோப்பை தொடரில் பலம் வாய்ந்த 5 அணிகளும், ஒரு கத்து குட்டி அணியும் விளையாடுகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான் போலவே 2 வீரர்களுக்கு இடையே நடைபெறும் மோதல்கள் தற்போது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Recommended Video

Asia Cup 2022: India ஏன் Win பண்ண முடியும்? | Aanee's Appeal

அதாவது சில பந்துவீச்சாளர்களை பார்த்தாலே பேட்ஸ்மேன்கள் ஆட்டமிழந்துவிடுவார்கள். சில பேட்ஸ்மேன்களை பார்த்தாலே பவுலர்களும் நடுங்குவார்கள்.

அப்படி ஆசிய கோப்பை தொடரில் உள்ள டாப் 4 போர் களத்தை பற்றி தான் நாம் பார்க்கிறோம். பும்ரா, ஷாகின் ஆப்ரிடி இல்லை என்றாலும், மற்ற வீரர்களுக்கு இடையே உள்ள பகையை தற்போது காணலாம்.

பாபர் அசாம் Vs ரஷித் கான்

பாபர் அசாம் Vs ரஷித் கான்

பேட்டிங்கில தற்போது கிங்காக இருக்கும் பாபர் அசாமும், பந்துவீச்சின் கிங்காக இருக்கும் ரணித் கானும் மோதி கொண்டால் என்னவாகும். நினைக்கவே ஆவலாக இருக்கிறது அல்லவா. அனைத்து பந்துவீச்சாளர்களையும் சுலபமாக எதிர்கொள்ளும் பாபர், ரஷித் கானிடம் மட்டும் கொஞ்சம் தடுமாறி இருக்கிறார். இதுவரை ரஷித் கான் வீசிய 48 பந்துகளை பதிர்கொண்ட பாபர் அசாம், 59 ரன்களை சேர்த்துள்ளார். இதில் 5 முறை பாபர் அசாம் ஆட்டமிழந்து இருக்கிறார்.

கோலி Vs ஹசரங்கா

கோலி Vs ஹசரங்கா

ஐபிஎல் தொடரில் ஒரே அணிக்காக விளையாடும் கோலியும், ஹசரங்காவுக்கும் இடையிலான போட்டியும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹசரங்கா வீழ்த்திய 116 விக்கெட்டுகளில் 86 விக்கெட் வலதுகை பேட்ஸ்மேன்களுடையது.இதே போன்று கோலியும் லெக் ஸ்பின்னர்களுக்கு எதிராக 62 என்ற அளவுக்கு சராசரியை வைத்துள்ளார்.கோலிக்கு இதுவரை ஹசரங்கா 6 பந்துகளை மட்டுமே வீசி இருக்கிறார். இதனால் இந்த போட்டியும் கவனிக்க தகுந்தததாக இருக்கும்

ராஜபக்சா Vs ஷதாப் கான்

ராஜபக்சா Vs ஷதாப் கான்

இதே போன்று இலங்கை அணியின் அதிரடி வீரர் ராஜபக்சா, பாகிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர் ஷதாப் கானின் 29 பந்துகளை எதிர்கொண்டு 45 ரன்களை விளாசி உள்ளார். ஒரே ஒரு முறை மட்டும் தான் அவருடைய பந்துவீச்சில் ஆட்டமிழந்து இருக்கிறார். எனினும் சுழற்பந்துவீச்சாளர்களிடம் 16 முறை ராஜபக்சா ஆட்டமிழந்து இருக்கிறார்.

ஹர்திக் Vs ரஹிம்

ஹர்திக் Vs ரஹிம்

ஹர்திக் பாண்டியாவுக்கும், வங்கதேச வீரர் முஸ்தபிகுர் ரஹிம்க்கும் இடையே அப்படி ஒரு ஏழாம் பொருத்தம். 2016 டி20 உலக கோப்பையில், 6 பந்துக்கு 11 ரன்கள் தேவைப்பட்ட போது, வெற்றி பெறாமலேயே கொண்டாடிய ரஹிம்க்கு தனது பந்துவீச்சு மூலம் பதிலடி தந்தார் ஹர்திக் பாண்டியா. அந்த நிகழ்வுக்கு பிறகு தற்போது தான் இருவரும் டி20 போட்டியில் மோதி கொள்ள உள்ளனர்.

Story first published: Wednesday, August 24, 2022, 22:23 [IST]
Other articles published on Aug 24, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+