Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அசத்திய ஓப்பனிங்... திமிறி எழுந்த இந்தியா... இரண்டாவது இன்னிங்ஸ் விறுவிறுவிறு

கொல்கத்தா: இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்சில் சறுக்கிய இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் மீண்டு வந்துள்ளது.

முதல் இரண்டு நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றைய ஆட்டமும் இன்றைய ஆட்டமும் தடையில்லாமல் நடந்துள்ளது. இலங்கை அணி பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் சிறப்பாக கலக்கியது.

இன்று இந்திய அணியின் பவுலிங்கை சமாளிக்க முடியாமல் இலங்கை அணி சீக்கிரமே சுரண்டது. இதையடுத்து இந்தியா தனது இரண்டாவது இன்னிங்ஸை மதியம் தொடங்கியது. இந்த நிலையில் தனது இரண்டாவது இன்னிங்சில் இந்தியா 1 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்துள்ளது.

மழை குறுக்கிட்ட முதல் நாள்

மழை குறுக்கிட்ட முதல் நாள்

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இந்தியா-இலங்கை நடுவே முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது . டாஸ் வென்ற இலங்கை பவுலிங்கை தேர்ந்தெடுத்தது. முதல் நாள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 17 ரன்கள் எடுத்தது. இந்த போட்டியின் போது மழை குறுக்கிட்டத்தால் போட்டி அடிக்கடி தடைபட்டது. கோஹ்லி, கே.எல் ராகுல் டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தனர்.

மழை விளையாடியது

மழை விளையாடியது

இரண்டாவது நாள் ஆட்டத்திலும் அதிக முறை மழை குறுக்கிட்டது. உணவு இடைவேளைக்கு பின் ஒரு பந்து கூட போடப்படாமல் போட்டி முடிந்தது. மழையால் பிட்சில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக இந்திய பேட்ஸ்மேன்கள் திணறினார்கள். இரண்டாவது நாள் ஆட்டத்தில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 74 ரன்கள் எடுத்தது.

முதல் இன்னிங்க்ஸ்

முதல் இன்னிங்க்ஸ்

மூன்றாவது நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. தொடர்ந்து பேட் செய்த இந்திய அணி 172 ரன்களில் ஆல்அவுட்டானது. அதிகபட்சமாக புஜாரா 52 ரன்கள் எடுத்தார். மற்ற இந்தியா பேட்ஸ்மேன்கள் அனைவரும் ஏமாற்றம் அளித்தனர். அதன்பின் களம் இறங்கிய இலங்கை அணி தொடக்கத்தில் இருந்து மாஸ் காட்டியது. பந்து வீச்சு போலவே பேட்டிங்கிலும் சிறப்பாக இருந்தது. 3வது நாள் முடிவில், இலங்கை அணி 45.4 ஓவர்களில் 165 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து இருந்தது.

முதல் இன்னிங்ஸ் முடிந்தது

முதல் இன்னிங்ஸ் முடிந்தது

இன்று காலையும் இலங்கை அணி தொடக்கத்தில் இருந்து நன்றாக விளையாடியது. முதல் இன்னிங்ஸ் முடிவில் இலங்கை 10 விக்கெட்டுக்கு 294 ரன்கள் எடுத்துள்ளது. அதிகபட்சமாக ரங்கனா ஹெராத் 67 ரன்கள் எடுத்தார். புவனேஷ்வர் குமார், ஷமி தலா நான்கு விக்கெட்டுகள் எடுத்தனர்.

திமிறி எழுந்த இந்தியா

திமிறி எழுந்த இந்தியா

அதன்பின் இரண்டாவது இன்னிங்ஸ் ஆட வந்த இந்திய அணி ஒருநாள் போட்டி போல அதிரடியாக ஆடியது. சிறப்பாக விளையாடிய தவான் 94 எடுத்து அவுட் ஆனார். கே.எல் ராகுல் 73 எடுத்து களத்தில் இருக்கிறார்.

இரண்டாவது இன்னிங்சில் இந்தியா 1 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்துள்ளது. நான்கு நாட்களில் முதல் இன்னிங்ஸ் மட்டுமே விளையாடி முடிக்கப்பட்டுள்ளதால் போட்டி டிராவை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது.

Story first published: Sunday, November 19, 2017, 17:45 [IST]
Other articles published on Nov 19, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+