Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விறுவிறுப்பான 4வது டெஸ்ட்.. வெல்லப் போவது யாரு.. ஒரு அலசல்!

சௌதாம்ப்டன் : இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுபயணம் செய்து விளையாடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1-2 என்ற நிலையில் பின்தங்கியுள்ளது.

இந்நிலையில் நான்காவது போட்டி சௌதாம்ப்டனில் உள்ள ரோஸ் பௌல் மைதானத்தில் நாளை நடைபெற இருக்கிறது. இந்த மைதானத்தில் கடைசியாக இந்திய அணி கடந்த 2014ஆம் ஆண்டு விளையாடியது.

fourth test


அந்த போட்டியில் இங்கிலாந்து 266 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. பசுமையான இந்த ஆடுகளம் பேட்டிங்க்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணி:

ட்ரெண்ட் பிரிட்ஜில் பெற்ற வெற்றி இந்திய அணியின் தன்னம்பிக்கையை வெகுவாக உயர்த்தியிருக்கும். முன்னணி பேட்ஸ்மேன்கள் அனைவரும் நல்ல பார்மில் இருப்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய இங்கிலாந்து தொடரில் முதல் முறையாக இந்திய அணி கடந்த போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சிறந்த தொடக்கம் அமைந்தது பேட்டிங் வரிசையை இன்னும் வலுப்படுத்தி உள்ளது.

ஹார்டிக் பாண்டியாவின் ஆல் ரவுண்டிங் திறமை இந்திய அணியின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் குறிப்பிடத்தகுந்த பங்கை வகிக்கும். வேகப்பந்து வீச்சாளர்கள் இந்த தொடரில் தொடக்கம் முதலே சிறப்பாக பந்துவீசி வருகிறார்கள். இந்த போட்டியிலும் அது தொடரும் என்று நம்பலாம்.

இந்திய அணியை பொறுத்தவரை அஸ்வினுக்கு பதிலாக ரவீந்திர ஜடேஜா இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விராட் கோஹ்லியின் அதிரடி பேட்டிங் மற்றும் சிறப்பான கேப்டன்சி இந்திய அணிக்கு மீண்டும் ஒரு வெற்றியை தேடி தரும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

இங்கிலாந்து அணி:

இங்கிலாந்து அணியை பொறுத்தவரை பந்துவீச்சில் வலிமையாக உள்ளது. அந்த அணியின் பேட்டிங் மற்றும் ஸ்லிப் பீல்டிங் கவலையளிக்க கூடிய விதமாக உள்ளது. அனுபவ வீரர் குக் தனது பேட்டிங் திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். இந்த தொடரில் இதுவரை பெரிதாக ரன்களை குவிக்காத ரூட் இந்த போட்டியில் தனது பார்மை மீட்டெடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

கடந்த போட்டியில் காயமடைந்த பைர்ஸ்டாவ் தற்போது குணமடைந்து விட்டார். அவர் விக்கெட் கீப்பராக களமிறங்கா விட்டால் ஸ்பெசலிஸ்ட் பேட்ஸ்மேன் ஆக களமிறக்குவது உறுதி. ஏனென்றால் இந்த தொடரில் அதிக ரன்களை குவித்த இங்கிலாந்து வீரர் அவரே. பட்லர் மற்றும் ஸ்டோக்ஸ் சிறந்த பேட்டிங் பார்மில் இருப்பது இங்கிலாந்து அணிக்கு ஆறுதல் அளிக்க கூடிய விஷயமாகும்.

இந்த போட்டியில் வென்று தொடரை சமன் செய்ய இந்திய அணியும் ,போட்டியில் வென்று தொடரை வெல்ல இங்கிலாந்து அணியும் கடுமையாக போராடும் இந்த டெஸ்ட் போட்டி மற்றுமொரு பரபரப்பான டெஸ்ட் ஆக இருக்கும் என்பதில் மாற்றுகருத்தேயில்லை !






Story first published: Wednesday, August 29, 2018, 9:37 [IST]
Other articles published on Aug 29, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+