பெங்களூர் சின்னசாமி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் வை-பை

பெங்களூர் சின்னசாமி கிரிக்கெட் ஸ்டேடியம் 34 ஆயிரம் ரசிகர்கள் அமரமும் வசதி கொண்டது. இவர்கள் அனைவருக்கும் இலவச இணையதள வசதியை அளிக்க ஸ்டேடியத்தின் ஐம்பது இடங்களில் வை-பை பாயிண்டுகளை பொருத்தியுள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி நிர்வாகம்.
இதுதொடர்பாக அந்த அணி நிர்வாகம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:
உலகிலேயே ரசிகர்களுக்கு இலவச இணையதள வசதி அளிக்கும் ஒரே அணி என்ற பெருமை பெங்களூர் ராயல் சேலஞ்சர்சுக்கு கிடைத்துள்ளது. பெங்களூர் அணி மோதும் பந்தையங்களின்போது மட்டும் ஸ்டேடியத்திற்கு வரும் ரசிகர்களுக்கு இந்த வசதி கிடைக்கும்.
இலவச வை-பை வசதி கிடைக்க ரசிகர்கள் தங்களது பெயர் மற்றும் போன் எண்ணை பதிவு செய்ய வேண்டும். அதன்பிறகு பாஸ்வேர்ட் அந்த போன் எண்ணுக்கு அனுப்பி வைக்கப்படும். அந்த பாஸ்வேர்டை பயன்படுத்தி இலவச இணைத்தை அனுபவிக்கலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications