Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இன்னா "மாமே".. யுவராஜ் சிங்கை கலாய்த்த பார்த்திவ் படேல்

டெல்லி: விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் பார்த்திவ் படேலுக்கும், யுவராஜ் சிங் மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோருக்கு இடையே டிவிட்டரில் நடந்த ஜாலியான "கலாய் சண்டை" ரசிகர்களை கலகலக்க வைத்துள்ளது.

ஒருவருக்கு ஒருவர் சமாதானம் சொல்லிக் கொள்வது போல இப்போது ஒருவருக்கு ஒருவர் கலாய்த்துக் கொள்வதுதான் பிரபலங்களின் பொழுது போக்காகி விட்டது.

அந்த வகையில் பார்த்திவ் படேலைப் பார்த்து யுவராஜ் சிங்கும், ஹர்பஜனும் கலாய்க்க, பதிலுக்கு அவர் கலாய்க்க டிவிட்டரே கலகலப்பாகி விட்டது.

கும்ப்ளே செய்த வேலை

கும்ப்ளே செய்த வேலை

முன்னாள் கேப்டன் கும்ப்ளே, இந்திய அணியின் பழைய குரூப் போட்டோ ஒன்றை எடுத்து தனது டிவிட்டரில் போட்டிடிருந்தார். அதை வைத்துத்தான் பார்த்திவ், யுவராஜ் மற்றும் ஹர்பஜன் சிங் கலாய்ப்பில் இறங்கினர்.

யாருப்பா அந்த பொடிப் பய?

யாருப்பா அந்த பொடிப் பய?

முதலில் ஹர்பஜன் சிங்தான் வம்பை ஆரம்பித்து வைத்தார். அந்தப் போட்டோவில் சிறிய வயது பார்த்திவ் படேலை அடையாளம் கண்ட அவர் அதை வைத்து கிண்டலை தொடங்கினார்.

போட்டு வாங்கிய யுவராஜ் சிங்

போட்டு வாங்கிய யுவராஜ் சிங்

அதை அப்படியே பின் தொடர்ந்த யுவராஜ் சிங் தன் பங்குக்கு தானும் கலாய்த்தார். சுள்ளான் போல இருப்பதுதான் பார்த்திவ் என்று கிண்டலடிக்க டிவிட்டர் உரையாடல் ஜாலியாகிப் போனது.

இன்னா மாமா!

இன்னா மாமா!

இதையடுத்து யுவராஜ் சிங்கைப் பார்த்து என்ன மாமா என்று பார்த்திவ் படைல் அழைக்க மேலும் கலகலப்பு கூடியது. ரசிகர்களம் இந்த குறும்புத்தனத்தைப் பார்த்துப் படித்து சிரித்துக் கொண்டனர்.

Story first published: Saturday, May 28, 2016, 12:39 [IST]
Other articles published on May 28, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+