Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனிக்கு ஏன் நன்றி சொன்னார் கோலி..?? கோலி, தோனி நட்பு எதிர்ப்பில் தொடங்கிய கதை தெரியுமா??

கேப்டவுன்: இந்திய டெஸ்ட் அணி கோப்டன் பதவியிலிருந்து விராட் கோலி விலகிய நிலையில், அவர் எழுதிய கடிதத்தில் தோனிக்கு பெரும் நன்றியை தெரிவித்து இருந்தார்

தோனிக்கு ஏன் அவ்வளவு முக்கியத்துவம் விராட் கோலி கொடுத்தார், இவர்களின் நட்பு எப்படி தொடங்கியது தெரியுமா..??

விராட் கோலியை கேப்டனாக தேர்ந்து எடுத்த தோனி தான். அவர் அணிக்கு வருவதை முதலில் எதிர்த்தார். என்ன ஆச்சரியமாக இருக்கிறதா..?

தோனி எதிர்ப்பு

தோனி எதிர்ப்பு

விராட் கோலி U-19 உலகக் கோப்பையை வென்றதும், அவரை அணியில் சேர்க்க வேண்டும் என்று அப்போதைய தேர்வுக்குழுத் தலைவர் தீலிப் வெங்சர்கார் தெரிவித்தார். ஆனால், அதனை விரும்பாத தோனி, கோலி இப்போது தான் கிரிக்கெட் களத்திற்கு வந்துள்ளார். அவருக்கு அனுபவம் போதாது. ஐ.பி.எல். போட்டியில் சிறப்பாக செயல்பட்ட அனுபவ வீரர் பத்ரிநாத்துக்கு தான் வாய்ப்பு தர வேண்டும் என்று தோனி கூறினார்

கலக்கிய விராட்

கலக்கிய விராட்

ஆனால், தோனியின் பேச்சை கேட்காத தீலிப் வெங்சர்கார் விராட் கோலிக்கு வாய்ப்பு தந்தார். ஆனால் விராட் கோலி முதல் சர்வதேச தொடரில் பெரிதாக சாதிக்கவில்லை. இதனால், அவர் அணியிலிருந்து நீக்கப்பட்டார். பின்பு மீண்டும் உள்ளூர் கிரிக்கெட்டில் கவனம், இந்தியா ஏ என கலக்கிய விராட் கோலி மீண்டும் அணிக்கு திரும்பினார்

வாய்ப்பு தந்த தோனி

வாய்ப்பு தந்த தோனி

விராட் கோலியின் பேட்டிங் திறமையை பார்த்த தோனி, இம்முறை எனக்கு கோலி வேண்டும் என்று கேட்டு பெற்றார். தோனிக்கு எப்போதுமே இளம் வீரர்கள் கடுமையாக உழைத்தால், சாதிக்க வேண்டும் என்ற வெறி இருந்தால் பிடிக்கும். அது கோலிக்குள் இருந்ததை தோனி கண்டுபிடித்தார். இதன் விளைவாக அவருக்கு பல வாய்ப்புகளை தந்தார்.

தோனியின் சிபாரிசு

தோனியின் சிபாரிசு

விராட் கோலி, தொடர்ந்து ரன்களை குவித்து சாதிக்க இவர் தான் இந்திய அணியை வழிநடத்த சிறந்த நபர் என்று முடிவு எடுத்த தோனி, அவரை துணை கேப்டனாக பதவி உயர்வு வழங்கி அழகு பார்த்தார். பல போட்டிகளில் இந்தியாவுக்கு கோலி வெற்றி தேடி தந்தார். அதற்கு கிடைத்த பரிசு தான் அது. ஒரு கட்டத்தில் டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து தோனி விலகிய போது விராட் கோலியின் பெயரையே பி.சி.சி.ஐ.யிடம் சிபாரிசு செய்தார். இதனால் தான் விராட் கோலி, தோனிக்கு தன் நன்றியை குறிப்பிட்டு இருந்தார்.

Story first published: Sunday, January 16, 2022, 18:40 [IST]
Other articles published on Jan 16, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+