For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

Friendship day 2023 - கிரிக்கெட் உலகில் காலத்தால் அழியாத 5 நட்புகள்.. முழுகாத ஷிப்பே பிரண்ட்ஷிப்பா

மும்பை : உலகம் முழுவதும் இன்று நட்பு தினம் கொண்டாடப்படுகிறது. இந்த உலகத்தில் யாருக்கு எந்த சொந்தமும் கூட இல்லாமல் இருக்கலாம். ஆனால் நண்பன் என்று சொந்தம் நிச்சயமாக அனைவருக்குமே இருந்திருக்கும்.

வெவ்வேறு தாய் வயிற்றில் பிறந்திருந்தாலும் ஒன்றாக வளர்ந்து தோள் கொடுப்பவனே உண்மையான நண்பன். இந்த நிலையில் கிரிக்கெட் உலகில் அப்படி சிறந்து விளங்கிய ஐந்து நண்பர்கள் குறித்து தான் தற்போது பார்க்கப் போகிறோம்.

Friendship day 2023 - 5 cricketers Friendship Which will live for eternity

விராட் கோலியும் தென்னாப்பிரிக்காவின் டிவில்லியர்ஸும் அவ்வளவு நெருங்கிய நண்பர்களாக இருக்கிறார்கள். ஆர் சி பி அணிக்காக விளையாடிய போது இருவரும் ஒருவருக்கு ஒருவர் துணையாக இருந்திருக்கிறார்கள். டிவில்லியர்ஸ் ஓய்வு பெற்றவுடன் விராட் கோலி அவ்வளவு மனம் வருத்தப்பட்டு அவருக்கு வாழ்த்து செய்தியை அனுப்பினார்.இவர்களுடைய நட்பு கண்டம் தாண்டி கண்டம் வரை பறந்து விரிந்து இருக்கிறது.

இந்தப் பட்டியலில் முக்கியமான நபர்களாக ஆண்டர்சன் பிராட் ஆகியோர் இருக்கிறார்கள். இருவரும் இணைந்து 138 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 537 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்கள். நண்பர்களை தாண்டி அண்ணன் தம்பி போல் இருவரும் பழகி வருகிறார்கள். அண்மையில் பிராட் ஓய்வு பெற்றவுடன் ஆண்டர்சன் அழுத காட்சியும் உங்களுக்கு நினைவு இருக்கலாம்.

இந்தப் பட்டியலில் முக்கிய இடத்தை பிடித்திருப்பவர்கள் வெஸ்ட் இண்டீஸ் அதிரடி ஆல் ரவுண்டர்கள் பிராவோ மற்றும் பொலார்டு. களத்தில் ஒருவரை ஒருவர் அப்படி தங்களை கலாய்த்து கொள்வார்கள். ஐபிஎல் தொடரில் இவர்கள் பங்கேற்கும் போது நிச்சயம் கலாய்ப்பு இருக்கும். பிராவோ தோற்றால் பொலார்ட் கிண்டல் செய்வதும், பொலார்ட் தோற்றால் பிராவோ கிண்டல் செய்வதும் என இவர்களின் நட்பு பார்க்க அவ்வளவு சிறப்பாக இருக்கும்.

இந்த பட்டியலில் முக்கியமான ஜோடி என்றால் அது விராட் கோலியும் தோனியும் தான். கிரிக்கெட்டில் பல கஷ்டங்களை சந்தித்த போதெல்லாம் தோனி தான் தமக்கு துணையாக இருந்ததாக விராட் கோலி பலமுறை கூறியிருக்கிறார். தான் அடுத்த கேப்டனாக வர தோனி தான் தனக்கு துணை நின்றதாகவும் விராட் கோலியே ஓப்பனாக சொல்லி இருக்கிறார். மேலும் தோனி அணியில் இருந்தவரை அவரையே பல முக்கிய முடிவுகளை எடுக்க விராட் கோலி அனுமதியும் தந்தார். அந்த அளவிற்கு இவர்களுடைய நட்பு சிறந்து விளங்கியது.

இந்த பட்டியலிலே முதல் இடத்தை பிடித்திருப்பது தோனி ரெய்னாவின் நட்புதான். தன்னுடைய நண்பன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு இனி நான் எதற்கு விளையாட வேண்டும் என்று ரெய்னாவும் அதே நாளில் ஓய்வு பெற்றார். எப்படி பாசத்துக்கு ராமர் லக்ஷ்மனை மக்கள் சொல்வார்களோ அதே போல் தோனியும் ரெய்னாவும் கிரிக்கெட் உலகில் இருந்தனர். ரெய்னா அணியில் இவ்வளவு பெயர் வாங்கியதற்கு தோனியும் ஒரு காரணமாக இருந்தார். இவர்களுடைய நட்பை ஒரு செய்தியில் சொல்லி முடிப்பது என்பது மிகவும் கடினம்.

Story first published: Sunday, August 6, 2023, 16:34 [IST]
Other articles published on Aug 6, 2023
English summary
Friendship day 2023 - 5 cricketers Friendship Which will live for eternity Friendship day 2023 - கிரிக்கெட் உலகில் காலத்தால் அழியாத 5 நட்புகள்.. முழுகாத ஷிப்பே பிரண்ட்ஷிப்பா
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+