Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மகளிர் ஐபிஎல்லை முழுமையா நடத்தணும்... அதுமூலமா திறமையான வீராங்கனைகள் கிடைப்பாங்க

டெல்லி : மகளிர் கிரிக்கெட்டில் ஐபிஎல் போட்டிகளை முழுமையாக நடத்தினால் ஷபாலி வர்மா போன்ற திறமையான வீராங்கனைகள் மகளிர் அணிக்கு கிடைப்பார்கள் என்று ஜெமிமா ரோட்ரிக்ஸ் தெரிவித்துள்ளார்.

மகளிருக்கான மாதிரி ஐபிஎல் போட்டிகளை கடந்த இரண்டு வருடங்களாக பிசிசிஐ நடத்தி வருகிறது. இந்த போட்டிகளின்மூலம் தான் ஷபாலி வர்மா மகளிர் அணிக்க கிடைத்தார்.

ஐபிஎல் போன்ற தொடர்களின் பங்கேற்று விளையாடுவதன்மூலம் இந்திய மகளிர் அணி மேலும் வலிமையாக மாறும் என்றும் ரோட்ரிக்ஸ் தெரிவித்துள்ளார்.

ஜெமிமா ரோட்ரிக்ஸ் கோரிக்கை

ஜெமிமா ரோட்ரிக்ஸ் கோரிக்கை

மகளிருக்கான ஐபிஎல் போட்டிகளை முழுமையாக நடத்த வேண்டும் என்று பிசிசிஐயை ஜெமிமா ரோட்ரிக்ஸ் கேட்டுக் கொண்டுள்ளார். ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள், பிக் பாஷ் போன்ற தொடர்களை நடத்துவதன்மூலம் இளம் திறமைகளை கண்டறிந்து வருவது போல பிசிசிஐம் ஐபிஎல் போட்டிகளின் மூலம் புதிய திறமைகளை கண்டறிய முன்வர வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இளம் திறமைகளை கண்டறிய முடியும்

இளம் திறமைகளை கண்டறிய முடியும்

ஐசிசியின் 100 சதவிகிதம் கிரிக்கெட் நிகழ்ச்சிக்காக பேசிய ரோட்ரிக்ஸ், மகளிர் கிரிக்கெட்டில் மாதிரி ஐபிஎல் போட்டிகளை கடந்த 2 ஆண்டுகளாக நடத்துவதன் மூலம் இளம் வீராங்கனை ஷபாலி வர்மா கண்டறியப்பட்டுள்ளதை சுட்டிக் காட்டியுள்ளார். ஐபிஎல் போட்டிகளை முழுமையாக நடத்தி அதன்மூலம் பல இளம் வீராங்கனைகளை கண்டறிய முடியும் என்றும் கூறியுள்ளார்.

மகளிர் டி20 -பிசிசிஐ திட்டம்

மகளிர் டி20 -பிசிசிஐ திட்டம்

மேலும் இத்தகைய தொடர்களில் விளையாடுவதன்மூலம் இந்திய மகளிர் அணி மேலும் வலிமையடையும் என்றும் அவர் கூறியுள்ளார். ஆடவர் ஐபிஎல் போட்டிகளை போல 4 அணிகளை கொண்ட டி20 போட்டிகளை மகளிருக்காக நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. ப்ளே ஆப்புடன் 7 போட்டிகளை கொண்ட தொடராக இது நடத்தப்பட உள்ளது.

வெற்றி வாய்ப்பு அதிகம்

வெற்றி வாய்ப்பு அதிகம்

இதன்மூலம் இளம் திறமைகள் மற்ற வீராங்கனைகளுடன் இணைந்து ஆடும் வாய்ப்பு கிடைக்கும் என்றும் ரோட்ரிக்ஸ் சுட்டிக் காட்டியுள்ளார். மேலும் பௌலர்களுக்கு ஓவர்களை அதிகரிக்கும் திட்டத்திற்கும் ரோட்ரிக்ஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதன்மூலம் முக்கிய தருணங்களில் பௌலர்கள் போட்டிகளை வெற்றி கொள்ள வாய்ப்பு கிடைக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Story first published: Wednesday, June 17, 2020, 21:54 [IST]
Other articles published on Jun 17, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+