Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் வர்ணனையாளர்கள் பட்டியல் வெளியீடு... பாகிஸ்தான் வீரர்களுக்கு இடமில்லை!

பெங்களூரு: ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்கும் வர்ணனையாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் பாகிஸ்தான் வீரர்களின் ஒரு பாகிஸ்தான் வீரரின் பெயர் கூட இடம்பெறவில்லை.

கிரிக்கெட் ரசிகர்களின் திருவிழாவான ஐபிஎல் போட்டிகள் இன்று தொடங்குகிறது. இந்த போட்டிகள் வரும் மே மாதம் 21ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

10 இடங்களில் 47 நாட்கள் நடைபெறும் இப்போட்டி சோனி சிக்ஸ், சோன மேக்ஸ்வெல் ஆகிய சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன. இதில் 20 வர்ணனையாளர்கள் பங்கேற்று போட்டிகளை தொகுத்து வழங்கவுள்ளனர்.

பட்டியல் வெளியீடு

பட்டியல் வெளியீடு

அந்த வர்ணனையாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியா, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து நாடுகளைச் சேர்ந்த முன்னாள் வீரர்கள் இதில் இடம் பெற்றுள்ளனர்.

பாகிஸ்தான் வீரர்கள் இல்லை

பாகிஸ்தான் வீரர்கள் இல்லை

அதேநேரத்தில பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு வீரர் கூட இந்த பட்டியலில் இடம்பெறவில்லை. கடந்த ஐபிஎல் போட்டிகளில் பாகிஸ்தானின் ரமிஸ் ராஜா, ஷோயப் அக்தர், வக்கார் யூனிஸ் மற்றும் வாசிம் அக்ரம் ஆகியோர் வர்ணனையாளர்களாக இடம் பெற்றிருந்தனர்.

ஆஸி.யில் 7 பேர்

ஆஸி.யில் 7 பேர்

அதிகளவாக ஆஸ்திரேலியாவில் இருந்து 7 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். அடுத்தப்படியாக இந்தியாவில் இருந்து 6 வீரர்களும் நியூஸிலாந்திலிருந்து 3 பேரும் இடம்பெற்றுள்ளனர். மேலும் இங்கிலாந்திலிருந்து 2 வீரர்களும் வெஸ்ட் இன்டிஸ் மற்றும் ஜிம்பாப்வேவில் இருந்து தலா ஒருவரும் இந்த ஐபிஎல் போட்டியில் வர்ணனையாளர்களாக பங்கேற்கின்றனர்.

பெண் வர்ணனையாளர்கள்..

பெண் வர்ணனையாளர்கள்..

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் அன்ஜும் சோப்ரா, ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் லிசா ஸ்தலேகர், ஆஸ்திரேலியாவின் மெலனி ஜோன்ஸ், இங்கிலாந்தின் இசா குஹா ஆகிய பெண் வர்ணனையாளர்களும் ஐபிஎல் போட்டி வர்ணனையாளர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். அந்த பட்டியல் இதோ...

1.சுனில் கவாஸ்கர் (இந்தியா)

2.ரவி சாஸ்திரி (இந்தியா)

3.சஞ்ஜய் மஞ்சுரேக்கர் (இந்தியா)

4.லக்ஷமண் சிவராமகிருஷ்ணன் (இந்தியா)

5.அன்ஜும் சோப்ரா (இந்தியா)

6.முரளி கார்த்திக் (இந்தியா)

7.ஸ்காட் ஸ்டீரிஸ் (நியூசிலாந்து)

8.சிமோன் டுவோல் (நியூசிலாந்து

9.டேனி மோரிஸன் (நியூசிலாந்து)

10.மைக்கேல் ஹஸி (ஆஸ்திரேலியா)

11.லிசா ஸ்தலேகர் (ஆஸ்திரேலியா)

12.மேத்யூ ஹெய்டன் (ஆஸ்திரேலியா)

13.மெலனி ஜோன்ஸ் (ஆஸ்திரேலியா)

14.மைக்கேல் கிளார்க் (ஆஸ்திரேலியா)

15.பிரென்டன் ஜுலியன் (ஆஸ்திரேலியா)

16.பிரட் லீ (ஆஸ்திரேலியா)

17.கெவின் பீட்டர்சன் (இங்கிலாந்து)

18.இசா குஹா (இங்கிலாந்து)

19.டரென் கங்கா (வெஸ்ட் இன்டிஸ்)

20.பொம்மி பங்வா (ஜிம்பாப்வே)

Story first published: Wednesday, April 5, 2017, 13:55 [IST]
Other articles published on Apr 5, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+