Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மேக்ஸ்வெல் அடிச்சாக, மில்லர் அடிச்சாக... கடைசியில சிம்மன்ஸ் வந்துதான் செஞ்சுரி போட்டாக...!

மொஹாலி: பலமுறை மேக்ஸ்வெல் முயன்றும் முடியாததை சத்தமே போடாமல் மும்பை இந்தியன்ஸ் வீரர் லென்டில் சிம்மன்ஸ் நேற்று அனாயசமாக வந்து சாதித்து விட்டார்.

நடப்பு ஐபிஎல் தொடர் தொடங்கி 47 போட்டிகள் வரை ஒருவர் கூட சதம் போடாமல் இருந்து வந்த நிலைமை மாறி நேற்றைய 48வது போட்டியின்போது சிம்மன்ஸ் அருமையாக ஆடி சதம் போட்டார். மும்பை அணிக்கும் வெற்றி தேடித் தந்தார்.

இத்தனைக்கும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கிளன் மேக்ஸ்வெல் மாட்டடி அடித்து ஆடி வருகிறார். 3 முறை சதம் போடும் வாய்ப்பு கிட்டியும் கோட்ட விட்டார். ஆனால் சத்தமே போடாமல் சாதித்துள்ளார் சிம்மன்ஸ்.. இவர் மேற்கு இந்தியதீவுகள் அணி வீரர் ஆவார்.

டன் போட்ட முதல் வீரர்

டன் போட்ட முதல் வீரர்

7வது ஐபிஎல் தொடரில் சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை சிம்மன்ஸ் நேற்று பெற்றார். இது ஐபிஎல் வரலாற்றில் 29வது சதமும் ஆகும்.

முதல் சதம் போட்ட மெக்கல்லம்

முதல் சதம் போட்ட மெக்கல்லம்

ஐபிஎல் போட்டிகளில் முதன் முதலில் சதம் அடித்த வீரர் பிரன்டன் மெக்கல்லம்தான். 2008ம் ஆண்டு ஏப்ரல் 18ம் தேதி பெங்களூர் மைதானத்தில் நடந்த போட்டியில் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் அவர் அபாரமாக ஆடி 158 ரன்களைக் குவித்தார். அப்போது அவர் கொல்கத்தா அணியில் இடம் பெற்றிருந்தார்.

பெரிய சதம்.. கெய்ல் கையில்

பெரிய சதம்.. கெய்ல் கையில்

அதேசமயம், அதிகபட்சமாக ஒரு போட்டியில் அதிக ரன்களைக் குவித்த வீரர் கிறிஸ் கெய்ல்தான். 2013ல் புனே வாரியர்ஸ் அணிக்கு எதிரான போட்டியின்போது இவர் புயல் வேகத்தில் ஆடி 175 ரன்களைக் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதுவரை போடப்பட்டட 29 சதங்கள்

இதுவரை போடப்பட்டட 29 சதங்கள்

ஐபிஎல் போட்டிகளில் 2008 தொடங்கி இதுவரை 29 சதங்கள் போடப்பட்டுள்ளன.

3 முறை தலா 6 சதங்கள்

3 முறை தலா 6 சதங்கள்

இதில் 2008ம் ஆண்டு 6 சதங்கள் விளாசப்பட்டன. 2011ல் 6 சதங்களும், 2012ல் 6 சதங்களும் போடப்பட்டன. 2002ல் 2, 2010ல் 4, 2013ல் சதங்கள் விளாசப்பட்டன. இந்த ஆண்டு இதுவரை ஒரே ஒரு சதம்தான் போடப்பட்டுள்ளது.

அதிக சதம் போட்டவர் கெய்ல்...

அதிக சதம் போட்டவர் கெய்ல்...

இதில் கிறிஸ் கெய்ல் மட்டுமே அதிக அளவிலான சதங்களைப் போட்டுள்ளார். மொத்தம் நான்கு சதங்களை அவர் விளாசியுள்ளார். 2011ல் 2 சதம், 2012 மற்றும் 2013ல் தலா ஒரு சதம் என அவர் போட்டுள்ளார்.

முரளி விஜய் - வார்னர் - கில்கிறைஸ்ட்

முரளி விஜய் - வார்னர் - கில்கிறைஸ்ட்

அதேபோல சென்னை சூப்பர் கிங்ஸ் சார்பி்ல் முரளி விஜய் 2 முறை சதம் போட்டுள்ளார். கிங்ஸ் லெவன் பஞ்சாப் சார்பாகவும், டெக்கான் சார்ஜர்ஸ் சார்பாகவும் ஆடம் கில்கிறைஸ்ட் 2 சதங்கள் போட்டுள்ளார். டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக டேவிட் வார்னர் 2 சதங்கள் எடுத்துள்ளார்.

Story first published: Thursday, May 22, 2014, 15:45 [IST]
Other articles published on May 22, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+