Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒருநாள், டி20 கிரிக்கெட்டுகளில் அறிமுகமானது புதிய ரூல்ஸ்! பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி

துபாய்: சர்வதேச ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் பல்வேறு விதிமுறைகள் மாற்றம் செய்யப்பட்டு நேற்று, முதல் அந்த மாற்றங்கள் அமலுக்கு வந்துள்ளன. நேற்று நடைபெற்ற தென் ஆப்பிரிக்கா- வங்கதேசம் இடையேயான டி20 கிரிக்கெட் போட்டி, இந்த புதிய விதிமுறைகளின்கீழ்தான் ஆடப்பட்டது. கிரிக்கெட் முற்றிலும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான விளையாட்டாக மாறுவதை தடுத்து, போட்டியில் சம நிலையை ஏற்படுத்தும் நோக்கத்தில், இம்மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

வரும் 10ம் தேதி ஜிம்பாப்வேயில் இந்திய அணி சுற்றுப் பயணம் செய்ய உள்ள நிலையில் இந்த விதிமுறை மாற்றங்கள் குறித்த ஒரு பார்வை.

பவர்பிளே இல்லை

பவர்பிளே இல்லை

ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் 10 ஓவர்களுக்கு கட்டாய கேட்ச்சிங் ஃபீல்டர்கள் நிறுத்தப்பட வேண்டியதில்லை. பேட்டிங் பவர்பிளே இனிமேல் கிடையாது. 41 முதல் 50வது ஓவர்களின்போது, இனிமேல் 5 ஃபீல்டர்கள், எல்லைக்கோட்டின் அருகே நிற்க முடியும்.

இடைவேளை

இடைவேளை

இரண்டாவதாக பேட்டிங் செய்யும், அணி வெற்றி ரன்களை தொட நெருங்கிவிட்டதாக உணரும் நேரத்தில், சாப்பாடு பிரேக் அறிவிக்கப்பட்டால், இரு அணிகளில் எந்த கேப்டன் வேண்டுமானாலும், நடுவரை அணுகி, மேலும் 15 நிமிட நேரமோ அல்லது, 4 ஓவர்கள் வீசவோ அணுதி கேட்கலாம். அதற்குள் ரிசல்ட் வராவிட்டால் பிரேக் விடப்பட்டு மீண்டும் ஆட்டம் தொடங்கும்.

நோ-பால்கள்

நோ-பால்கள்

க்ரீசுக்கு வெளியே கால் வைத்து வீசப்படும் நோ-பால்களுக்கு மட்டும் இதுவரை ஃப்ரீ ஹிட் தரப்பட்டது. இனிமேல், பவுன்சர் வகை நோ-பால்கள், தவறுதலாக கூடுதல் ஃபீல்டர்களை 30 யார்ட் சர்க்கிளுக்கு வெளியே நிறுத்தியதற்காக தரப்படும் நோ-பால்கள் உள்ளிட்டவற்றுக்கும் ஃப்ரீஹிட் உண்டு.

அட்ஜஸ்ட் செய்யலாம்

அட்ஜஸ்ட் செய்யலாம்

பவுலர் பந்து வீச ஓடி வர ஆரம்பித்த பிறகு ஃபீல்டர்களோ, விக்கெட் கீப்பரோ தனது நிலையில் இருந்து மாறக்கூடாது என்பது பழைய விதிமுறை. ஆனால், பேட்ஸ்மேன்கள் ரிவர்ஸ் ஸ்வீப் போன்ற வித்தியாசமான ஷாட்டுகளை அடிக்க தங்களது நிற்கும் நிலையில் இருந்து மாறும்போது, ஃபீல்டர்களும், விக்கெட் கீப்பரும் கூட தங்கள் நிலையை மாற்றிக்கொள்ளலாம்.

பேசாம இருக்கனும்

பேசாம இருக்கனும்

பந்து வீச்சாளர் பந்தை வீசும் முன்பாக, எதிர்திசை (நான்-ஸ்டிரைக்கர்) பேட்ஸ்மேன் கிரீசை விட்டு வெளியே ஓடத் தொடங்கினால், பவுலர் அவரை ரன் அவுட் செய்ய முடியும். முன்பெல்லாம் இதுபோன்ற தவறுகளுக்கு வார்னிங் தரப்பட்டுவந்த நிலையில் இப்போது அவுட் என்பது, அதிகாரப்பூர்வமாகவே அறிவிக்கப்பட்டுள்ளது.

சேட்டை பவுலர்கள்

சேட்டை பவுலர்கள்

அனுமதிக்கப்பட்டதைவிட அதிக பவுன்சர்கள் வீசுவது, பேட்ஸ்மேனை காயப்படும் நோக்கத்தில் ஃபுல்டாஸ் பந்துகளை வீசுவது, பிட்சை சேதப்படுத்தும் வகையில் அதன் மீது ஓடுவது, பேட்ஸ்மேனை ரன் எடுக்கவிடாமல் குறுக்கே ஓடி இடையூறு செய்வது போன்ற செயல்களில் ஈடுபடும் பவுலர்கள் மீது புகார் செய்ய நடுவர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

Story first published: Monday, July 6, 2015, 13:02 [IST]
Other articles published on Jul 6, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+