நியூயார்க்: அமெரிக்காவில் வரும் 7-ந் தேதி நடைபெற உள்ள "கிரிக்கெட் ஆல் ஸ்டார்ஸ்" டி20 தொடரில் முன்னாள் ஜாம்பவான்கள் 30 பேர் பங்கேற்க உள்ளன. இந்தியாவின் கங்குலி, ஷேவாக் உள்ளிட்டோர் இதில் இடம்பெற்றுள்ளனர்.
கிரிக்கெட்டை பிரபலப்படுத்தும் வகையில் முன்னாள் முன்னணி வீரர்கள் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டிக்கு இந்திய கிரிக்கெட்டின் 'கடவுள்' சச்சின் டெண்டுல்கரும், ஆஸ்திரேலிய அணியின் ஷேன் வார்னேயும் ஏற்பாடுகள் செய்தனர்.

சச்சின் அணிக்கு சச்சினின் பிளாஸ்டர்ஸ் என்றும் வார்னே அணிக்கு வார்னேயின் வாரியர்ஸ் என்றும் பெயரிடப்பட்டுள்ளது. நியூயார்க்கில் வரும் 7-ந் தேதி முதல் போட்டி நடைபெற உள்ளது. 2-வது போட்டி வரும் 11-ந்தேதி ஹூஸ்டனிலும், 3-வது மற்றும் கடைசி போட்டி லாஸ் ஏஞ்சல்சில் 14- ந் தேதியும் நடைபெற உள்ளது.
இதில் விளையாடும் வீரர்கள்:
டெண்டுல்கர் (இந்தியா)
ஷேன் வார்னே (ஆஸ்திரேலியா)
கங்குலி (இந்தியா)
வி.வி.எஸ். லக்ஷ்மண் (இந்தியா)
அஜித் அகர்கர் (இந்தியா)
பொல்லாக் (தென்னாப்பிரிக்கா)
ஜேக்குஸ் காலிஸ் (தென்னாப்பிரிக்கா)
குலுஸ்னெர் (தென்னாப்பிரிக்கா)
ஜாண்டி ரோட்ஸ் (தென்னாப்பிரிக்கா)
மகேள ஜெயவர்த்தன (இலங்கை)
குமார் சங்ககார (இலங்கை)
முத்தையா முரளிதரன் (இலங்கை)
மாத்யூ ஹைடன் (ஆஸ்திரேலியா)
ஸ்வான் (இங்கிலாந்து)
வால்ஷ் (மேற்கிந்திய தீவுகள்)
டொனால்ட் (தென்னாப்பிரிக்கா)
பிரைன் லாரா (மேற்கிந்திய தீவுகள்)
ஆம்ப்ரோஷ் (மேற்கிந்திய தீவுகள்)
ஹூப்பர் (மேற்கிந்திய தீவுகள்)
வெட்டோரி (நியூசிலாந்து)
பாண்டிங் (ஆஸ்திரேலியா)
சிமோண்ட்ஸ் (ஆஸ்திரேலியா)
மெக்ரத் (ஆஸ்திரேலியா)
வாசிக் அக்ரம் (பாகிஸ்தான்)
ஷேவாக் (இந்தியா)
முஸ்டாக் (பாகிஸ்தான்)
சோயிப் அக்தர் ( பாகிஸ்தான்)