Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

செஸ் ஒலிம்பியாட் 2022: தொடக்க விழா முதல் போட்டிகள் வரை.. எங்கு எப்படி பார்ப்பது??.. முழு அட்டவணை இதோ

சென்னை: 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் இன்று சென்னையில் கோலாகலமாக தொடங்கவுள்ளது.

செஸ் விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு திருவிழாவாக பார்க்கபடும் இந்த போட்டி முதல் முறையாக இந்தியாவில் நடத்தும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்த போட்டிகள் இன்று ( ஜூலை 28ம் தேதி ) முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை சென்னை மாமல்லபுரத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

போட்டி விவரங்கள்

போட்டி விவரங்கள்

இந்தியாவில் அதிக கிராண்ட் மாஸ்டர்களை கொண்ட மாநிலமாக தமிழகம் இருப்பதால், இந்த போட்டியை நடத்தும் உரிமையை தமிழகத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதில் 189 நாடுகளில் இருந்து சுமார் 2,000க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்குபெற்கின்றனர். இந்தியாவின் சார்பில் 30 பேர் 6 குழுக்களாக விளையாடவுள்ளனர்.

தொடக்க நிகழ்ச்சி

தொடக்க நிகழ்ச்சி

செஸ் ஒலிம்பியாட் தொடருக்காக இன்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் தொடக்க விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த தொடக்க விழா இன்று இரவு 7 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் கலந்துக்கொண்டு போட்டிகளை தொடங்கி வைக்கவுள்ளனர். இதற்கான இறுதிகட்ட ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

எப்படி பார்ப்பது?

எப்படி பார்ப்பது?

இந்நிலையில் இந்த நிகழ்ச்சி மற்றும் போட்டிகளை எங்கு? எப்படி? பார்க்கலாம் எனத் தெரிந்துக்கொள்ளுங்கள். இந்த போட்டி மற்றும் நிகழ்ச்சியை பொதுமக்கள் தூர்தஷன் சேனலில் நேரலையாக காணலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று ஆன்லைனில் Chessbase India மற்றும் FIDE ஆகிய யூட்டியூப் பக்கங்களில் பார்க்கலாம் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

போட்டி அட்டவணை

போட்டி அட்டவணை

இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் மொத்தமாக 11 சுற்றுகளாக நடைபெறவுள்ளது. அதன்படி நாளை முதல் ( ஜூலை 29 ) ஆகஸ்ட் 9ம் தேதி வரை நாளொன்றுக்கு ஒரு சுற்று என்ற கணக்கில் நடைபெறவிருக்கிறது. தினமும் மதியம் 3 மணிக்கு போட்டிகள் தொடங்கவுள்ளது. இதில் ஆகஸ்ட் 4ம் தேதி மற்றும் ஓய்வு தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Story first published: Thursday, July 28, 2022, 11:32 [IST]
Other articles published on Jul 28, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+