3 டெஸ்ட் போட்டிகள்.. கோஹ்லி தலைமையில் இந்திய அணி அடுத்தமாதம் இலங்கை டூர்
மும்பை: இலங்கையில் இந்திய கிரிக்கெட் அணி சுற்றுப் பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகளில் ஆட உள்ளது. அடுத்த மாதம் நடைபெற உள்ள இத்தொடருக்கான கால அட்டவணையை இந்திய கிரிக்கெட் வாரியம் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

ஆகஸ்ட் 3ம் தேதி இந்திய அணி, இலங்கை சென்றடைகிறது. ஆகஸ்ட் 6 முதல் 8ம் தேதி வரையில், 3 நாட்களுக்கு, பயிற்சி ஆட்டத்தில் இந்தியா விளையாட உள்ளது. ஆகஸ்ட் 12 முதல் 16ம் தேதிவரை, முதல் டெஸ்ட் போட்டி காலே நகரில் நடைபெற உள்ளது.
ஆகஸ்ட் 20 முதல் 24ம் தேதி வரையில், 2வது டெஸ்ட் போட்டி, கொழும்பு தமிழ் யூனியன் ஓவல் மைதானத்தில் வைத்து நடைபெற உள்ளது. ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் வரையில் 3வது டெஸ்ட் போட்டி கொழும்பு, சிங்கள ஸ்போர்ட்ஸ் கிளப்பில் வைத்து நடைபெறும்.
இந்த தொடருக்கு விராட் கோஹ்லி கேப்டனாக செயல்படுவார்.
Story first published: Thursday, July 9, 2015, 15:12 [IST]
Other articles published on Jul 9, 2015


Click it and Unblock the Notifications