Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிறப்பான வீரர்களை களமிறக்கிய டெல்லி கேபிடல்ஸ்... ஸ்மித்தும் உள்ள வந்துருக்காரு.. வலிமையான கூட்டணி!

சென்னை : கடந்த 2020 ஐபிஎல் தொடரில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணி இறுதிப்போட்டி வரை சிறப்பாக முன்னேறி ரன்னர்-அப்பாக மாறியது.

இந்நிலையில் தற்போது நேற்றைய ஐபிஎல் 2021 ஏலத்தில் ஸ்டீவ் ஸ்மித், டாம் குர்ரான், சாம் பில்லிங்ஸ், உமேஷ் யாதவ் உள்ளிட்ட முக்கிய வீரர்களை களமிறக்கியுள்ளது.

ஏற்கனவே அணியில் ஷிகர் தவான், ரிஷப் பந்த், அக்சர் படேல், இஷாந்த் சர்மா, ரவி அஸ்வின் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் உள்ள நிலையில் எதிர்வரும் ஐபிஎல் 2021 தொடரை வலிமையுடன் எதிர்கொள்ளவுள்ளது.

ஐபிஎல் ஏலம் 2021

ஐபிஎல் ஏலம் 2021

ஐபிஎல் 2021 தொடருக்கான ஏலம் சிறப்பான முறையில் நேற்றைய தினம் நடந்தேறியுள்ளது. இதில் டெல்லி கேபிடல்ஸ் அணி சிறப்பான முறையில் செயல்பட்டு தங்களது அணிக்கு தேவையான வீரர்களை சிறப்பான முறையில் தேர்ந்தெடுத்துள்ளது. முக்கியமாக அணியில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் இணைந்துள்ளார்.

டெல்லி அணியில் இணைந்த ஸ்மித்

டெல்லி அணியில் இணைந்த ஸ்மித்

ஸ்மித்தின் ஆதார விலை 2 கோடியாக உள்ள நிலையில் அவரை வெறும் 2.20 கோடி ரூபாய்க்கு டெல்லி கேபிடல்ஸ் ஏலத்தில் எடுத்துள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்ட ஸ்மித் தற்போது விடுவிக்கப்பட்டு டெல்லி அணியில் இணைந்துள்ளார். அவரது தலைமை பண்பு, அனுபவம் உள்ளிட்ட அனைத்தும் அணிக்கு சிறப்பாக உதவும் என்று அணியின் உரிமையாளர் பார்த் ஜெயின் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

த்ரில்லாக உணர்கிறோம்

த்ரில்லாக உணர்கிறோம்

ஸ்மித் குறைந்த விலைக்கு ஏலத்தில் கிடைத்துள்ளது குறித்து டெல்லி கேபிடல்ஸ் மிகவும் த்ரில்லாக உணர்வதாகவும் அவர் கூறியுள்ளார். அவர் அதிகமான விலைக்கு ஏலத்தில் கேட்கப்படுவார் என்று தாங்கள் கருதியதாகவும் ஆனால் நினைத்ததற்கு மாறாக நடந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வலிமை கூடிய டெல்லி அணி

வலிமை கூடிய டெல்லி அணி

ஸ்மித் மட்டுமில்லாமல் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டாம் குர்ரானையும் 5.25 கோடி ரூபாய்க்கு டெல்லி அணி வாங்கியுள்ளது. மேலும் சாம் பில்லிங்ஸ், உமேஷ் யாதவ் ஆகியோர் முறையே 2 மற்றும் ஒரு கோடிக்கு வாங்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் டெல்லி கேபிடல்ஸ் அணியின் வலிமை இந்த சீசனில் மேலும் கூடியுள்ளது.

சிறப்பான டெல்லி கேபிடல்ஸ்

சிறப்பான டெல்லி கேபிடல்ஸ்

ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணி கடந்த முறை ரன்னர் -அப்பாக வந்தது. அணியில் ஷிகர் தவான், பிரித்வி ஷா, ரஹானே, ரிஷப் பந்த், அக்சர் படேல், அமித் மிஸ்ரா, இஷாந்த் சர்மா, ஆர் அஸ்வின், காகிசோ ரபடா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் ஏற்கனவே உள்ள நிலையில் தற்போது ஸ்மித் உள்ளிட்டவர்கள் இணைந்துள்ளது அணியின் முக்கிய பலமாக பார்க்கப்படுகிறது.

Story first published: Friday, February 19, 2021, 16:33 [IST]
Other articles published on Feb 19, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+