Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வீடியோ: என்னைய விட்டுறு.. நேரடியாக காலில் விழுந்த பிராவோ.. விடாமல் கொடூரமாக கலாய்த்த பொல்லார்ட்!

டல்லாஸ்: மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் குவாலிஃபயர் 2வது போட்டியில் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இதையடுத்து டிஎஸ்கே அணியின் பிராவோவை மும்பை அணியின் கேப்டன் பொல்லார்ட் கலாய்த்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

ஐபிஎல் தொடரின் சிறந்த அணி யார் என்பதில் சென்னை அணி ரசிகர்களுக்கும், மும்பை அணி ரசிகர்களுக்கும் சமூக வலைதளங்களில் கடுமையான விவாதங்கள் நடக்கும். அதேபோல் சென்னை அணியின் பிராவோ மற்றும் மும்பை அணியின் பொல்லார்ட் இருவரும் ரசிகர்களை போலவே சமூக வலைதளங்களில் கலாய்த்து கொள்வார்கள்.

Fun Banter between Bravo and Pollard video after the MLC Qualifier 2nd Match in Trending in Social Media

அந்த வகையில் ஐபிஎல் தொடரை சிஎஸ்கே வென்ற பின், ஒரு வீரராக நான் 17 கோப்பைகளை வென்றிருக்கிறேன். அதேபோல் பொல்லார்ட் 15 கோப்பைகளை தான் வென்றிருக்கிறார். அதனால் சீனியரான எனக்கு பொல்லார்ட் அதிக மரியாதையை கொடுக்க வேண்டும் என்று பொல்லார்டை கலாய்த்து வீடியோ வெளியிட்டார்.

இந்த நிலையில் அமெரிக்காவில் நடைபெற்று வரும் மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் குவாலிஃபயர் 2வது போட்டியில் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணி வென்று அசத்தியுள்ளது. இதன் மூலம் எம்எல்சி தொடரின் இறுதிபோட்டிக்கும் மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணி முன்னேறியது.

Fun Banter between Bravo and Pollard video after the MLC Qualifier 2nd Match in Trending in Social Media

இந்த வெற்றிக்கு பின் மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணியின் கேப்டன் பொல்லார்ட், டெக்ஸாஸ் அணிக்காக ஆடிய பிராவோவை அழைத்து கலாய்த்துள்ளார். ஒவ்வொரு முறையும் பிராவோ எப்படி கொண்டாடுவாரோ, அதேபோல் இம்முறை பொல்லார்ட் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு கலாய்த்தார்.

இதையடுத்து பிராவோ, பொல்லார்டின் கால்களில் விழுந்து தோல்வியை ஒப்புக்கொண்டதாக தெரிவித்தார். இதன்பின்னர் இருவரும் பேசிக் கொண்டனர். இந்த வீடியோ சென்னை மற்றும் மும்பை அணி ரசிகர்களிடையே சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

Story first published: Saturday, July 29, 2023, 17:28 [IST]
Other articles published on Jul 29, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+