Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எமோஜி கிட்... மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்களுக்கு அளிக்கும் காமெடி தண்டனை!

மும்பை: மும்பை அணியின் மூன்று இளம் வீரர்கள் வித்தியாசமான உடையில் விமான நிலையத்துக்கு வந்த படங்கள், வீடியோக்களை பார்த்தவர்கள் சிரித்திருப்பார்கள்.

ஜம்ப் சூட் எனப்படும் பேண்டும், சர்ட்டும் இணைத்து தைக்கப்பட்டநீளமான உடையில் இஷான் கிஷண், அனுகுல் ராய், ராகுல் சாகர் ஆகியோர் இருப்பது போன்ற வீடியோ மட்டும் படங்கள் வெளியாகி உள்ளது.

funny punishment for MI players

மும்பை இந்தியன்ஸ் அணி ஜெர்சியின் நீல நிறத்தில், அணியின் வீரர்கள் படங்கள் எமோஜிக்கள் போல இடம்பெற்றுள்ள அந்த உடை வித்தியாசமாக இருந்தது.

அந்த மூவரும் அந்த உடை அணிவதற்கு காரணம் என்ன தெரியுமா?

மும்பை இந்தியன்ஸ் அணியினர் போட்டி நடக்கும் நாட்கள் மற்றும் போட்டி இல்லாத நாட்களில் ஜிம்மில் பயிற்சி எடுக்க வேண்டும். இதில் சீனியர், ஜூனியர் என்று எந்த பாகுபாடும் கிடையாது.

அவ்வாறு பயிற்சியில் ஈடுபடாத வீரர்களுக்கு அளிக்கப்படும் தண்டனைதான், இந்த வித்தியாசமான உடையை அணிவது.

இந்த ஆண்டு அந்த தண்டனையை இந்த மூவரும் முதல் முறையாக பெற்றுள்ளனர். இவர்கள் அந்த உடையுடன் இருக்கும் வீடியோவை, மும்பை இந்தியன்ஸ் அணி தனது பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளது.

மூவரும் கறுப்பு கண்ணாடி அணிந்திருத்தனர். காரணம் கேட்டதற்கு, மற்றவர்களை பார்ப்பதற்கு வெட்கமாக இருப்பதாகக் கூறியுள்ளனர். இனி ஜிம் பயிற்சிகளை மிஸ் பண்ண மாட்டோம் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

Story first published: Thursday, May 3, 2018, 6:35 [IST]
Other articles published on May 3, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+