Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய கிரிக்கெட்டோட எதிர்காலம் சும்மா தகதகன்னு மின்னுது... முன்னாள் வீரர்கள் சூப்பர் புகழ்ச்சி

டெல்லி : ஐபிஎல்லில் விளையாடிவரும் இளம் வீரர்கள் நம்பிக்கை அளிப்பதாகவும் இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலம் சிறப்பாக உள்ளதாகவும் முன்னாள் இந்திய வீரர் ஆஷிஷ் நெஹ்ரா மற்றும் சஞ்சய் பாங்கர் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

ஸ்டார் ஸ்போர்ட்சின் கிரிக்கெட் கனெக்டட் நிகழ்ச்சிக்காக பேசிய முன்னாள் இந்திய அணியின் கோச் சஞ்சய் பாங்கர், சன்ரைசர்ஸ் ஐதராபாத்தின் பௌலர் டி நடராஜன் குறித்து பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதேபோல முன்னாள் வீரர் ஆஷிஷ் நெஹ்ரா கூறுகையில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் லெக் ஸ்பின்னர் ரவி பிஸ்னோய் மற்றும் ஆர்சிபியின் துவக்க ஆட்டக்காரர் தேவ்தத் படிக்கல் ஆகியோர் குறித்து பாராட்டு தெரிவித்துள்ளார்.

திணறும் மூத்த வீரர்கள்

திணறும் மூத்த வீரர்கள்

ஐபிஎல்லின் 13வது சீசன் துவங்கி நடைபெற்று வருகிறது. 8 அணிகள் மோதும் இந்த தொடரில் பல்வேறு இளம் வீரர்கள் களமிறக்கப்பட்டு, சிறப்பான ஆட்டத்தை ரசிகர்களுக்கு தந்து வருகின்றனர். அவர்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் மூத்த வீரர்களே திணறும் நிலையும் சில நேரங்களில் காணப்படுகிறது.

சிறப்பாக அமையும்

சிறப்பாக அமையும்

இந்நிலையில், ஐபிஎல்லில் இளம் வீரர்கள் நம்பிக்கை அளிப்பதாகவும் இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலம் சிறப்பாக அமையும் என்றும் முன்னாள் வீரர் ஆஷிஷ் நெஹ்ரா மற்றும் சஞ்சய் பாங்கர் ஆகியோர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். ஸ்டார் ஸ்போர்ட்சின் கிரிக்கெட் கனெக்டட் நிகழ்ச்சிக்காக பேசிய இருவரும் இவ்வாறு கூறியுள்ளனர்.

சிறப்பான யார்க்கர்

சிறப்பான யார்க்கர்

சன்ரைசர்ஸ் ஐதராபாத்தின் பௌலர் டி நடராஜன் கடினமான யார்க்கர் பந்தை சிறப்பாக கையாண்டு எஸ்ஆர்எச்சின் டெத் பௌலிங் நெருக்கடியை தீர்த்துள்ளதாக குறிப்பிட்ட பாங்கர், அவருடைய பௌலிங் தன்னை வெகுவாக கவர்ந்துள்ளதாகவும் ஐபிஎல்லில் அவர் தன்னை வெகுவாக கவர்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆஷிஷ் நெஹ்ரா பாராட்டு

ஆஷிஷ் நெஹ்ரா பாராட்டு

இதேபோல கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் இளம் லெக்-ஸ்பின்னர் ரவி பிஸ்னோய் மற்றும் ஆர்சிபியின் துவக்க ஆட்டக்காரர் தேவ்தத் படிக்கல்லின் ஆட்டத்தை தான் வெகுவாக ரசிப்பதாக முன்னாள் வீரர் ஆஷிஷ் நெஹ்ரா தெரிவித்துள்ளார். அவர்கள் இருவரும் எதிர்காலத்தில் எவ்வாறு விளையாடுகிறார்கள் என்பதை காண தான் ஆவலுடன் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Story first published: Thursday, October 8, 2020, 20:33 [IST]
Other articles published on Oct 8, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+