நல்லவேளை யுவராஜ் சிங்கை களம் இறக்கலை.. களை கட்டிய "ஓட்டல்கள்"!
சென்னை: ஆஸ்திரேலியாவை இந்தியா முதல் டுவென்டி 20 போட்டியில் திருப்திகரமாக புரட்டி எடுத்து புளகாங்கிதமடைந்தது என்றாலும் கூட சில பல வீரர்களை வைத்து ஓட்டுவதும் நடந்தேறியுள்ளது.
ஓட்டுவதில் பிரபலமானவரான கப்பர் சிங், நேற்றைய போட்டியின்போது இடை இடையே டிவிட்டரில் போட்டு வந்த ஜாலியான கமெண்டுகள் பலரையும் கவர்ந்து இழுத்தன.
குறிப்பாக விரோத் கோஹ்லி, பாண்ட்யா, யுவராஜ் சிங், நெஹ்ராவை வைத்து அவர் ஜாலி கிண்டல்களை அள்ளி வீசினார். அதிலிருந்து சில...
நல்லவேளை யுவராஜ் வரலை
யுவராஜ் சிங்கை பேட் செய்ய அனுப்பாததை வைத்து போடப்பட்ட கமெண்ட் இது.
அய்யோ.. தனுஷு
புதுமுக வீரர் ஹர்டிக் பாண்ட்யாவை யாருடன் கம்பேர் செய்துள்ளார் பாருங்கள். ராஞ்சனா படத்தில் வரும் தனுஷ் மாதிரி இருக்காராம் பாண்ட்யா!.
ஒரே நேரத்தில் 2 நாடுகளுக்குப் பரேடு!
இது குடியரசு தினத்தையும் கோர்த்து விட்டு கமெண்ட். ஒரே நேரத்தில் ஆஸ்திரேலியரக்ளையும், பிரான்ஸையும் பரேட் விட்டுள்ளனர் இந்தியர்கள் என்று டைமிங் கமெண்ட் இது.
இப்படியே போனா பத்மஸ்ரீதான்!
ஹர்டிக் பாண்ட்யா இதே ரேஞ்சில் போனால் அடுத்த வருஷம் அவருக்கு பத்மஸ்ரீ விருது கன்பர்ம்ட்.. உண்மைதானே...!
அதோ பாரு லட்டு!
ஆசிஷ் நேஹ்ரா ஒரு கேட்ச்சைப் பிடித்த விதத்தை வைத்து இந்த லட்டு கமெண்ட்.. சும்மா சொல்லக் கூடாது, தடுமாறினாலும் கூட கேட்ச்சை விடாமல் பிடித்து விட்டார் நேஹ்ரா.
நாட்டி பாய்!
"நைன்டீஸ்" குழந்தைகளுக்கு சச்சின் ஹீரோ போல.. "நாட்டீஸ்"களுக்கு கோஹ்லியாம்.


Click it and Unblock the Notifications