Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டெல்டாவை காப்போம்.. ஆஸ்திரேலியா - இந்தியா டி-20 போட்டியில் ஒலித்த கஜா விழிப்புணர்வு!

Recommended Video

இந்தியா டி-20 போட்டியில் ஒலித்த கஜா விழிப்புணர்வு!

சிட்னி: ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் இந்தியாவிற்கு எதிரான டி - 20 கிரிக்கெட் போட்டியில் கஜா புயல் குறித்து விழிப்புணர்வு விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

கஜா புயலால் தமிழகம் மொத்தமாக நிலைகுலைந்து போய் உள்ளது. லட்சக்கணக்கான மக்கள் மொத்தமாக வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.

Gaja relief: Save Delta posters gets huge reach in Australia Vs India match

இந்த நிலையில் கஜா புயல் நிவாரணத்திற்கு உலக நாடுகள் முழுக்க இருக்கும் தமிழர்கள் உதவி வருகிறார்கள். வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் டெல்டா மக்களுக்காக நிவாரண பொருட்களை அனுப்பி வருகின்றனர்.

இந்த நிலையில் ஆஸ்திரேலியாவில் இருக்கும் தமிழர்கள், கஜா புயல் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக வித்தியாசமான விஷயம் ஒன்றை செய்துள்ளார். அதன்படி ஆஸ்திரேலியா இந்தியா கிரிக்கெட் போட்டியில் கஜா புயல் குறித்து பிரச்சாரம் செய்துள்ளனர்.

இன்று ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் மோதும் மூன்றாவது டி-20 போட்டி நடந்து வருகிறது. இதில் பார்வையாளராக காலத்து கொண்ட தமிழர்கள் கஜா புயல் குறித்து விளம்பர பலகைகளை வைத்து இருந்தனர்.

டெல்டாவை காப்போம், தமிழ்நாடு விவசாயிகளை காப்போம், கஜா புயல் நிவாரணம் என்று வாசகங்கள் அடங்கிய விளம்பரங்களை செய்து இருந்தனர். இந்த பிரச்சாரம் மக்களை பெரிய அளவில் கவர்ந்தது.

கிரிக்கெட் போட்டிகளை உலகம் முழுக்க பல கோடி மக்கள் பார்ப்பார்கள் என்பதால், இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் பெரிய அளவில் மக்களை சென்று சேரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, November 25, 2018, 16:44 [IST]
Other articles published on Nov 25, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+