திடீரென இடிந்த மைதான மேற்கூரை.. ஆஸ்திரேலிய வீரர்களுக்கு நேரவிருந்த ஆபத்து.. இலங்கை தொடரில் பரபரப்பு!
பிர்மிங்கம்: இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது ஆஸ்திரேலிய வீரர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 2 டெஸ்ட், 5 ஒருநாள் போட்டிகள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இதில் டி20 தொடரில் ஆஸ்திரேலிய அணியும், ஒருநாள் தொடரை இலங்கை அணியும் கைப்பற்றிய நிலையில் டெஸ்ட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

முதல் டெஸ்ட் போட்டி
இரு அணிகளும் மோதும் முதல் டெஸ்ட் போட்டி இலங்கையில் உள்ள கல்லே மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இலங்கை அணி 212 ரன்கள் அடிக்க, ஆஸ்திரேலிய அணி 177/5 ரன்களை எடுத்து விளையாடி வருகிறது. ஆட்டம் சூடுபிடிக்கும் நேரத்தில் தான் மழை குறுக்கிட்டு தடைப்பட்டது.

திடீரென பரபரப்பு
இந்நிலையில் மைதானத்தின் ஒருபகுதி சரிந்து விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மைதானத்தின் ஒருபுறத்தில், சிறிய ஸ்டாண்ட் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதிவேகமாக அடித்த காற்றால், அந்த ஸ்டாண்ட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது. அங்கு யாரும் இல்லாததால் உயிர் சேதத்தை தவிர்த்து விட்டனர்.

சரிந்த கண்ணாடி சுவர்
இதுஒருபுறம் இருக்க, மைதானத்தில் இருந்த ஒரு பெரிய கண்ணாடி சுவர் திடீரென கீழே விழுந்தது. அந்த இடம் தான் ஆஸ்திரேலிய வீரர்களின் டக் அவுட்டாக இருந்தது. அந்த சமயத்தில் சரியாக யாரும் இல்லை என்பதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. மேலும் மழை நின்ற பின் ஆட்டம் மீண்டும் தொடங்கப்பட்டது.
வீரர்கள் அதிருப்தி
இது போன்ற மிகப்பெரிய போட்டிகளில் மைதானத்தில் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் கடமை. ஆனால் தற்போது நடைபெற்றிருக்கும் இந்த சம்பவம் மற்ற அணிகளுக்கு பயத்தை உண்டாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications