சும்மா யோசிக்காதீங்க.. மத்தவங்கள விடுங்க.. 4வது இடத்துக்கு இவர புடிங்க.. கலக்கும் கம்பீர்
மும்பை: உலக கோப்பையில் தோனி ஆடும் போட்டிகளில் கூட சாம்சனை சேர்த்து, 4ம் வரிசையில் இறக்கலாம் என்று முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் யோசனை தெரிவித்துள்ளார்.
உலக கோப்பை கிரிக்கெட் மே இறுதியில் தொடங்கும் நிலையில் அனைவரின் பார்வையும் தற்போதைய ஐபிஎல் தொடரின் மீது இருக்கிறது. உலக கோப்பை அணி பரிசீலனையில் இருக்கும் வீரர்களை பரிசோதிக்க, ஐபிஎல் ஒரு வாய்ப்பாக இருக்கிறது.
இந்திய அணியில் டாப் ஆர்டரில் பேட்டிங்,பந்துவீச்சு ஆகியவை சூப்பராக உள்ளது. தோனி பார்முக்கு வந்துவிட்டதால் 5ம் வரிசை பிரச்னையில்லை. 6ம் வரிசையில் கேதர் ஜாதவ் சூப்பராக ஆடி வருகிறார்.

தொடர்கதை
4ம் வரிசையில் யார் என்பது தான் முடிவில்லாமல் தொடர் கதையாகி வருகிறது. 4ம் வரிசை வீரர் மற்றும் மாற்று விக்கெட் கீப்பர் இரண்டும் தொங்கலில் தான் உள்ளது. ராயுடு நன்றாக ஆடிவந்த நிலையில், தற்போது சொதப்புவதால் உலக கோப்பைக்கு உண்டா, இல்லையா என்பதே தெரியவில்லை.

விக்கெட் கீப்பர்
விஜய் சங்கர் மிடில் ஆர்டரில் கலக்க... அவர் எடுக்கப்படலாம் என்று தெரிகிறது. மாற்று விக்கெட் கீப்பராக தினேஷ் கார்த்திக்கை விட ரிஷப் பண்டுக்கு அதிக சான்ஸ் இருப்பதாக தெரிகிறது.
யோசனை
இந்த எல்லா பிரச்னைகளுக்கும் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் ஒரு யோசனை தெரிவித்துள்ளார். தமது டுவிட்டர் பதிவில் அவர் கூறியிருப்பதாவது:

சாம்சன் வேண்டும்
நான் எந்த ஒரு தனிப்பட்ட வீரரையும் பற்றி பேசமாட்டேன். சாம்சனின் திறமையை பார்க்கும்போது பேசாமல் இருக்க முடியவில்லை. சஞ்சு சாம்சன் தான் தற்போதைய சூழலில் மிகச்சிறந்த விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன். உலக கோப்பையில் அவரையே 4ம் வரிசையில் இறக்கலாம் என்று கூறியிருக்கிறார்.

பலன் தருமா?
ஐபிஎல்லில் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சஞ்சு சாம்சன், சிறப்பாக ஆடி ரன்னை மளமளவென உயர்த்தினார். நிதானம், அதிரடி என இந்த ஐபிஎல்லில் முதல் சதமடித்து அசத்தி இருக்கிறார். எனவே தோனி ஆடும் போட்டிகளில் கூட சாம்சனை சேர்த்து, 4ம் வரிசையில் இறக்கினால் பலன் கிடைக்கும் என்றே தோன்றுகிறது.


Click it and Unblock the Notifications