For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கம்பீர் ஒன்றும் ஹர்சித் ராணாவுக்கு தாய் மாமா கிடையாது.. முன்னாள் கேகேஆர் வீரர் பேச்சு

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஆன கம்பீர் தமக்கு சாதகமான வீரர்களுக்கு மட்டும்தான் அணியில் வாய்ப்பு தருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்திய டி20 அணியில் சிறப்பாக விளையாடி வந்த சஞ்சு சாம்சன் தேவையில்லாமல் அணியிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார்.

இதை போன்று டெஸ்ட் கிரிக்கெட்டில் முகமது சமி மற்றும் சர்பராஸ் கான் ஆகியோர் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து வாய்ப்பு மறுக்கப்பட்டு வருகிறது .ஆனால் ஹர்ஷித் ராணாவுக்கு மட்டும் கம்பீர் தொடர்ந்து இந்திய அணியில் சேர்த்து வருகிறார்.

Gambhir Harsahit

இதனால் பலரும் கம்பீருக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். கொல்கத்தா அணியில் கம்பீர் பயிற்சியாளராக இருந்தபோது ஹர்ஷித்ராணா விளையாடியதாகவும், இதனால் தான் கம்பீர் ஒரு தலைப்பட்சமாக அவருக்கு சாதகமாக நடந்து கொள்கிறார் என்றும் விமர்சனம் எழுந்துள்ளது.

எனினும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் மவிந்தர் பிஸ்லா, கம்பீரை தற்காத்து பேசியிருக்கிறார். அதில் ஹர்ஷித்ராணாவை எதிர்க்கும் நபர்கள் எல்லாம் கண்டிப்பாக கேகேஆர் அணியை பிடிக்காதவர்களாக தான் இருப்பார்கள். இதை நான் நேர்மையாக சொல்கின்றேன்.

ஹர்ஷித் ரானாவின் தாய் மாமா ஒன்றும் கம்பீர் கிடையாது. ஹர்ஷித் ரானா திறமையானவர் என தெரிந்ததுதான் கம்பீர் அவருக்கு வாய்ப்பு தருகிறார். தற்போது நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் ஹர்ஷித் தான் அதிக விக்கெட்டுகளை எடுத்து இருந்தார்.

அது மட்டும் அல்லாமல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இரண்டாவது டி20 போட்டியில் இக்கட்டான கட்டத்தில் 33 பந்துகளில் 35 ரன்கள் எடுத்தார். மூன்றாவது ஒருநாள் போட்டியில் அவர் முக்கியமான பார்ட்னர்ஷிப்பை உடைத்தார். இப்படி இருக்கும் போது ஹர்ஷித் ராணாவை விமர்சிப்பது மிகவும் தவறு என மவீந்தர் பிஸ்லா கூறியுள்ளார். கொல்கத்தா அணிக்காக விளையாடும் போது கம்பீர் எவ்வாறு செயல்படுவார் என்பதை தான் நேரில் பார்த்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Story first published: Wednesday, November 12, 2025, 9:23 [IST]
Other articles published on Nov 12, 2025
English summary
Gambhir is not uncle Harshit rana uncle says Former KKR Player Mavinder Bisla
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+