ராஜபக்சே சிபாரிசில் இலங்கையில் சிகிச்சை- கம்பீர், நெஹ்ரா மீது பிசிசிஐ கடும் கோபம்
டெல்லி: ராஜபக்சேவின் சிபாரிசின் பேரில், இலங்கைக்குப் போய் ஆயுர்வதே சிகிச்சை எடுத்துக் கொண்டதற்காக இந்திய கிரிக்கெட் வீரர்கள் கெளதம் கம்பீர், ஆசிஷ் நெஹ்ரா மீது இந்திய கிரிக்கெட் வாரியம் கடும் கோபம் கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இனப்படுகொலையை படு சுதந்திரமாக செய்து வரும் ராஜபக்சேவின் அழைப்பின் பேரில் சமீபத்தில் இலங்கை சென்று ஆயுர்வதே சிகிச்சை செய்து திரும்பியுள்ளனர் கம்பீரும், நெஹ்ராவும்.
இலங்கை கிரிக்கெட் வீரர் தில்ஷானின் சிபாரிசின் பேரில் அவர்கள் ராஜபக்சேவை சந்தித்து அவரது ஏற்பாட்டின் பேரில் ஆயுர்வதேச சிகிச்சை செய்து கொண்டனர். ராஜபக்சேவையும் சந்தித்து மகிழ்ச்சி பொங்க நன்றி கூறி விட்டு இந்தியா திரும்பியுள்ளனர்.
இவர்களின் இந்த செயலால் இந்திய கிரிக்கெட் வாரியம் கடும் கோபமடைந்துள்ளதாம். முன் அனுமதி பெறாமல் இருவரும் சிகிச்சை எடுத்துக் கொள்ள இலங்கை போனதால் இந்தக் கோபமாம்.
ரகசிய சிகிச்சை எடுத்துக் கொண்டது போல கம்பீரும், நெஹ்ராவும் நடந்து கொண்டுள்ளதாக கிரிக்கெட் வாரியம் கருதுகிறதாம். சொல்லாமல் கொள்ளாமல் இலங்கை போனது தவறு. இதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என இருவருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாம்.
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஒப்பந்தப் பட்டியலில் ஏ கிரேடில் இருக்கிறார் கம்பீர். அவரது வருட சம்பளம் ரூ. 60 லட்சமாகும். அதேபோல பி கிரேடில் இருப்பவர் நெஹ்ரா.


Click it and Unblock the Notifications