For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மூத்த வீரர்னா இப்படி இருக்கணும்.. தோனிக்கு என்ன ஒரு மரியாதை!! கோலியை பாராட்டிய கங்குலி!

மும்பை : இந்திய அணி கேப்டன் கோலி, தோனி சரியாக பேட்டிங் ஆடாத போதும் ஒரு வருடத்திற்கும் மேல் அவருக்கு அணியில் இடம் அளித்து வந்ததை பாராட்டியுள்ளார் கங்குலி.

இது இருவருக்கும் இடையே உள்ள மரியாதையை காட்டுகிறது என கூறி பெருமிதப் பட்டுள்ளார் கங்குலி.

தோனி பேட்டிங் பார்ம்

தோனி பேட்டிங் பார்ம்

தோனி கடந்த 2018 ஆம் ஆண்டு பேட்டிங்கில் சொதப்பி வந்தார். தற்போது ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் தொடர்ந்து மூன்று அரைசதங்கள் அடித்து தன் பேட்டிங் திறனை மீட்டு கொண்டு வந்துள்ளார்.

கோலி ஆதரவு

கோலி ஆதரவு

இந்த நிலையில், கடந்த வருடம் சுமார் 20 போட்டிகளில் 275 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தாலும், அணியில் தோனியை தொடர்ந்து நீக்காமல் வைத்திருந்தார் கேப்டன் கோலி. தோனியை நீக்க வேண்டும் என சிலர் கூறினாலும் அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு அளித்து ஆதரித்தார் கோலி. அதை பாராட்டினார் கங்குலி.

தோனி பக்கம் நின்ற கோலி

தோனி பக்கம் நின்ற கோலி

கங்குலி கூறுகையில், "இவர்கள் இருவரும் இந்திய அணிக்காக அதிக போட்டிகள் ஆடிய வீரர்கள். தோனி அணியின் மூத்த வீரராக இருக்கிறார். எல்லாவற்றுக்கும் மேல், கடந்த வருடத்தில் முன்னாள் கேப்டன் மீது நிறைய அழுத்தம் இருந்தாலும், அவர் பக்கம் நின்றார் கோலி" என குறிப்பிட்டார்.

பரஸ்பர மரியாதை

பரஸ்பர மரியாதை

மேலும், "பல முறை தோனி பெரிய வீரர், அவர் தான் அணியின் பலம் என கூறினார். மிகச் சில கேப்டன்களே இத்தனை தூரம் ஒருவரை ஆதரிப்பார்கள். கோலி தோனியை கடந்த 15-16 மாதங்களாக ஆதரித்ததை பாராட்டுகிறேன். பெரிய வீரர்கள் இடையே பரஸ்பர மரியாதை இல்லை என்றால் எந்த அணியும் சிறப்பாக இருக்காது" என கூறினார் கங்குலி.

Story first published: Monday, January 21, 2019, 17:32 [IST]
Other articles published on Jan 21, 2019
English summary
Ganguly admire Kohli for not abandoning Dhoni at his hard times in the last 15-16 months.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+