For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வீரர்கள் நல்லா ஆட தோள்ள கை போட்டு இதை சொன்னா போதும்.. கேப்டன் கோலிக்கு கங்குலி யோசனை

Recommended Video

வீரர்கள் நல்லா ஆட கேப்டன் கோலிக்கு கங்குலி யோசனை- வீடியோ

மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி, விராட் கோலிக்கு அருமையான யோசனைகளை கூறியுள்ளார்.

இந்திய அணி இங்கிலாந்து தொடரில் படுதோல்வி அடைந்த நிலையில், பலரும் விமர்சித்து வரும் நிலையில், கங்குலி சிறிது இறங்கி வந்து கோலிக்கு அறிவுரை கூறி இருக்கிறார்.

இந்திய அணியின் சிறந்த கேப்டன் பட்டியலில் கங்குலிக்கு நிச்சயம் இடம் உண்டு. 2000ஆம் ஆண்டுக்கு பின் இந்திய அணியை புது பரிமாணத்தில் மாற்றிய வித்தகர் அவர். அவர் சொன்ன அந்த கேப்டன் அறிவுரை என்ன?

கேப்டன் என்ன செய்யணும்?

கேப்டன் என்ன செய்யணும்?

"இந்திய அணியில் புஜாரா, ரஹானே, ராகுல் இவர்கள் எல்லோரும் இங்கிலாந்து தொடரில் ஆடியதை விட பத்து மடங்கு நல்ல ஆட்டக்காரர்கள். கோலி தான் அவர்களிடம் இருந்து சிறந்த செயல்பாட்டை பெற வேண்டும்" என கூறியுள்ளார் கங்குலி. அது தான் ஒரு கேப்டனின் மிக முக்கிய பொறுப்பு எனவும் கூறியுள்ளார்.

எப்படி செய்வது?

எப்படி செய்வது?

கேப்டன் எப்படி வீரரிடம் இருந்து நல்ல செயல்பாட்டை பெறுவது என்ற ரகசியத்தையும் கூறினார் கங்குலி. "ஒரு வீரரின் தோளில் கை போட்டு, "நீ போட்டிகளை வென்று கொடுக்க வேண்டும்" என கூறினால் போதும். அவருடைய செயல்பாடுகள் உடனே அதிகரிக்கும். அந்த சூழ்நிலை அங்கே இருக்க வேண்டும். நல்ல திறமைசாலிகளை கண்டுபிடிக்க வேண்டும்" எனவும் கூறினார்.

கங்குலி சொன்னால் வேதவாக்கு

கங்குலி சொன்னால் வேதவாக்கு

கங்குலி இந்தியாவின் தலைசிறந்த கிரிக்கெட் கேப்டன்களுள் ஒருவர். அவர் தலைமை ஏற்ற காலத்தில், இந்திய அணியை கட்டமைப்பதில் அவர் காட்டிய அக்கறை மிக மிக அதிகம். அதற்கு முன் எந்த கேப்டனும் செய்யாத பல வேலைகளை தானே முன் வந்து செய்தார். இந்திய முதல் தர அணிகளில் திறமையை காட்டும் வீரர்களை அடையாளம் கண்டு அவர்களை வளர்த்து அணியில் சேர்த்தார். இந்தியாவிற்கு பல வெற்றிகளை தேடித் தந்தார். பல அதிரடி முடிவுகளை எடுத்தார். அதிரடி கேப்டன் என்ற பெயரும் அப்போது அவருக்கு உண்டு. அவர் சொல்கிறார் என்றால் அதை வேதவாக்காக எடுத்துக் கொண்டு கோலி பின்பற்ற வேண்டும்.

கங்குலி செய்து காட்டியவர்

கங்குலி செய்து காட்டியவர்

கங்குலி தன் காலத்தில் இப்படி பல திறமையான வீரர்களை அடையாளம் கண்டார். அப்படி அவர் அடையாளம் கண்டவர்களில் சிலர் பெரிய உயரத்தை தொட்டார்கள். அவர்கள் ஹர்பஜன், யுவராஜ் சிங், சேவாக், ஜாகிர் கான், மற்றும் தோனி.

Story first published: Thursday, September 13, 2018, 17:28 [IST]
Other articles published on Sep 13, 2018
English summary
Ganguly advice for kohli after the England test series defeat on his captaincy
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+