ஓவர் கான்பிடன்ஸ் உடம்புக்கு ஆகாது தம்பிகளா..!! இந்தியாவை எச்சரிக்கும் இருவர் #INDvsPAK
மான்செஸ்டர்: வெற்றி நமக்குத் தான் என்று அதிகபட்ச நம்பிக்கையில் இருக்க வேண்டாம் என்று இந்திய அணியை ஜாம்பவான்கள் சச்சின், கங்குலி எச்சரித்துள்ளனர்.
உலக கோப்பை தொடரில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதுகிறதென்றால் அதில் நிச்சயம் பரபரப்புக்கு பஞ்சமில்லை. உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்ந போட்டிக்கான எதிர்பார்ப்புகள் ஏகத்துக்கும் பரவி கிடக்கின்றன.
உலக கோப்பையில் ஒருமுறையாவது இந்தியாவை வென்றிட வேண்டும் என்பது பாகிஸ்தானின் கனவு. எனவே, பாகிஸ்தானுக்கு எதிராக ஞாயிறன்று நடைபெறும் உலக கோப்பையின் மிகப்பெரிய போட்டி. இந்த போட்டியில் தங்களுக்குத் தான் வெற்றி என்ற மிதமிஞ்சிய நம்பிக்கையில் இந்தியா இருக்க வேண்டாம் என்று ஜாம்பவான்கள் சச்சின் டெண்டுல்கர், கங்குலி ஆகியோர் எச்சரித்துள்ளனர்.

மண்ணை கவ்விய நிகழ்வு
இது குறித்து கங்குலி கூறியிருப்பதாவது: 2017ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியை மறந்துவிடக் கூடாது. அந்த போட்டியில் பாகிஸ்தானை சாதாரணமாக எடைபோட்டுத்தான் மண்ணை கவ்வ நேரிட்டது.

அதிக நம்பிக்கை
எனவே, இந்தியா மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். விளையாடும் முன்பே, வெற்றி நமக்கு தான் என்ற மிதமிஞ்சிய நம்பிக்கையில் ஆட வேண்டாம். முக்கிய போட்டி, எனவே இந்திய அணிக்கு அதிக கவனம் தேவை. நிச்சயம் மிகப்பிரமாதமான ஒரு கிரிக்கெட் போட்டியாக இருக்கும்.

2003ல் நடந்தது என்ன?
ரசிகர்கள் அதிக உற்சாகமாகத்தான் இருப்பார்கள். பாகிஸ்தானில் நாம் வென்றதேயில்லை, ஆனால் 2003ம் ஆண்டில் ஒருநாள் டெஸ்ட் இரண்டிலும் வென்றோம் என்றார்.

பாக். டேஞ்சரான அணி
இந்தியா, பாக். போட்டி குறித்து மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் கூறியிருப்பதாவது: பாகிஸ்தான் அணி, எப்பொதுமே எதிர்பார்க்க முடியாத, கணிக்க முடியாத அணி. அது ஒரு அபாயகரமான அணியும் கூட. எனவே இந்திய அணி அவர்களை எளிதாக எடைபோட வேண்டாம். அது போன்ற ஒரு வாய்ப்பையும் ஏற்படுத்திக்க வேண்டாம்.

திட்டமிடுவது அவசியம்
ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும் போதும் நாம் என்ன செய்கிறோம் என்பதில் 100 சதவீதம் உறுதியாக இருக்க வேண்டும். நிச்சயம் நன்கு யோசித்து நன்கு திட்டமிட்ட முடிவாக இருப்பது அவசியம். அப்போது தான் அது பலன் தரும என்றார்.


Click it and Unblock the Notifications