டாக்டர்.. டாக்டர்.. சவுரவ் கங்குலிக்கு மேலும் ஒரு டாக்டர் பட்டம்!
கொல்கத்தா: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலிக்கு மேலும் ஒரு டாக்டர் பட்டம் வழங்கப்பட இருக்கிறது.
அசாம் பல்கலைக் கழகத்தில் 2 ஆண்டுகளுக்கு முன்பு சவுரவ் கங்குலிக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து மேற்கு வங்கத்தின் சிப்பூர், பெங்கால் பொறியியல் கல்லூரி கங்குலிக்கு டாக்டர் பட்டம் வழங்க இருக்கிறது. இந்திய கிரிக்கெட் அணிக்கான கங்குலியின் பங்களிப்பை பாராட்டி இந்த டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது.
பிப்ரவரி 25-ந் தேதி நடைபெற உள்ள கல்லூரியின் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் கல்லூரியின் வேந்தரும் மாநில ஆளுநருமான எம்.கே. நாராயணன், கங்குலிக்கு டாக்டர் பட்டம் வழங்குவார்.
Story first published: Wednesday, January 15, 2014, 12:14 [IST]
Other articles published on Jan 15, 2014


Click it and Unblock the Notifications