Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்ன 'தாதா' இது கூட தெரியாதா?.. செல்பி எடுக்க தெரியாமல் திணறிய கங்குலி! -வீடியோ

கொல்கத்தா: இந்திய அணியை தற்போது இந்த நிலைமைக்கு கொண்டு வந்த வீரர் யார் என்று கேட்டால் கண்டிப்பாக கங்குலிதான் என்று சொல்ல முடியும். அந்த அளவுக்கு அவர் இந்திய அணிக்காக உழைத்து இருக்கிறார்.

கிரிக்கெட்டிற்கு பின்பும் ஓய்வு பெறாமல் அவர் தற்போது கமெண்ட்ரி செய்து கொண்டு இருக்கிறார். அதேபோல் கிரிக்கெட் விவாதங்களிலும் கலந்து கொண்டு இருக்கிறார்.

இந்த மனிதன் தன் குடும்பத்துடன் நேரமே செலவு செய்ய மாட்டாரோ என்று மக்கள் நினைக்கும் அளவிற்கு பிசியாக உழைத்துக் கொண்டு இருக்கிறார். இந்த நிலையில் அவர் குறித்த வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது.

கங்குலி குடும்பம்

கங்குலி குடும்பம்

கங்குலி தன் குடும்பத்துடன் நேற்று நேரம் செலவிட்டார். வீட்டில் இருக்கும் சரஸ்வதிக்கு பூஜை செய்து வணங்கினார். இதற்கு அவரது நெருங்கிய உறவினர்கள் பலர் வந்து இருந்தனர்.

பிரச்சனை

பிரச்சனை

இந்த விழாவில் கங்குலி தனது குடும்பத்துடன் செல்பி எடுக்க சென்று இருக்கிறார். ஆனால் செல்பி எடுக்க தெரியாமல் கஷ்டப்பட்டு இருக்கிறார். தன் மகளுடன் தனியாக எடுத்த போதும் இப்படி செல்பி எடுக்க தெரியாமல் முழித்து இருக்கிறார்.

கற்றுக் கொண்டார்

கற்றுக் கொண்டார்

அதன்பின் கங்குலி மகள் சானா அவருக்கு செல்பி எப்படி எடுக்க வேண்டும் என்று கற்றுக் கொடுத்தார். இது தற்போது வீடியோவாக வெளியாகி இருக்கிறது. இந்த அழகான வீடியோ தற்போது இணையம் முழுக்க வைரல் ஆகி இருக்கிறது.

சானா யார்

சானா யார்

சானா கங்குலி இப்போதே மிகவும் வைரல் ஆனவர். இன்ஸ்டாகிராமில் இவருக்கு பல விசிறிகள் இருக்கிறார்கள். அதேபோல் இவர் நடனம், பாடல் இரண்டிலும் கலக்க கூடியவர். கடந்த நவம்பரில் வந்த இவரது பிறந்த நாளுக்கு நிறைய பேர் வாழ்த்து தெரிவித்து இருந்தார்கள்.

Story first published: Monday, January 22, 2018, 16:47 [IST]
Other articles published on Jan 22, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+