Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எங்க ஆளு கோலியை கலாய்க்கிறியா? ஆஸி. அணி பயிற்சியாளருக்கு ரெய்டு விட்ட கங்குலி, கவாஸ்கர்

அடிலெய்டு : ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் நேற்று முன்தினம் கோலியின் விக்கெட் வீழ்ச்சிக் கொண்டாட்டம் பற்றி கருத்து கூறினார்.

கோலி ஓவராக கொண்டாடுகிறார் என்பதை கலாய்த்து கோலியை வம்பிழுக்கும் வகையில் இருந்தது அந்த கருத்து. கோலி செய்வது போல எங்களால் செய்ய முடியாது எனக் கூறி இருந்தார்.

இதை கண்டு பொங்கி எழுந்த முன்னாள் இந்திய வீரர்கள் கங்குலி மற்றும் கவாஸ்கர், ஜஸ்டின் லாங்கரை விளாசி உள்ளனர்.

கோலியின் ஓவர் கொண்டாட்டம்

கோலியின் ஓவர் கொண்டாட்டம்

விராட் கோலி முதல் டெஸ்ட் போட்டியில் ஒவ்வொரு விக்கெட் வீழ்ச்சிக்கும் பெரிய அளவில் கொண்டாடினார். கோலியின் கொண்டாட்டம் சில சமயங்களில் மிகவும் ஆக்ரோஷமாக இருந்தது. அதை குறிப்பிட்ட லாங்கர், கோலி போல நாங்களும் கொண்டாடினால் எங்களை மோசமானவர்கள் என கூறி விடுவார்கள் எனக் கூறினார்.

இதற்கு என்ன அர்த்தம்?

இதற்கு என்ன அர்த்தம்?

இந்த கருத்து, கோலியை கிண்டல் செய்யும் விதமாகவும், அதே சமயம் ஆஸ்திரேலிய அணி பாவம் என்பது போலவும் இருந்தது. பந்து சேத விவகாரத்தால் ஆஸ்திரேலிய அணி என்ன செய்தாலும் தவறு என்பது போன்ற நிலை உள்ளது. ஆனால், அதே விஷயத்தை கோலி செய்தால் யாரும் அதை குறை கூற மாட்டார்கள். அவர் "முன்னணி வீரர்" என்ற அர்த்தத்தில் அப்படி கூறி இருந்தார்.

கங்குலி பதிலடி அளித்தார்

கங்குலி பதிலடி அளித்தார்

இதில் தேவையில்லாமல் கோலியை ஏன் இழுக்கிறார்? என கோபம் கொண்ட கங்குலி, "நான் ஒரே ஒரு விஷயத்தை சொல்லிக் கொள்கிறேன். ஷேன் வார்னே, மெக்கிராத் அல்லது ஜேசன் கில்லெஸ்பி ஆகியோர் முந்தைய இந்திய சுற்றுப் பயணங்களில் பங்கேற்ற வீடியோவை லாங்கர் பார்த்து விட்டு வந்து பேசலாம்" எனக் கூறி சரியான பதிலடி கொடுத்தார்.

முன்பு எப்படி?

முன்பு எப்படி?

கங்குலி கூறியது போல ஆஸ்திரேலிய வீரர்கள் ஒவ்வொரு விக்கெட்டுக்கும் மிகவும் ஆக்ரோஷமாக கொண்டாடுவார்கள். பேட்ஸ்மேன் விக்கெட் இழந்து செல்லும் போது வம்பிழுப்பார்கள். இதையெல்லாம் பார்த்து விட்டு வாருங்கள் என லாங்கரை கூறியுள்ளார் கங்குலி. ஜஸ்டின் லாங்கரும் அவர்களோடு அணியில் இருந்தவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

கவாஸ்கர் விளாசல்

கவாஸ்கர் விளாசல்

கவாஸ்கர் கூறுகையில், "கோலி ஆக்ரோஷமாக மட்டுமே கொண்டாடுகிறார். அதில் வேறு எந்த தவறும் இல்லை. ஆனால், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் அதை செய்யும் போது மட்டும் ஏன் கெட்ட பெயர் கிடைக்கிறது? அவர்கள் புண்படுத்தும் வகையில் கொண்டாடுகிறார்கள். லாங்கர் என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளலாம். ஆனால், அவரை பார்த்து யாரும் பரிதாபப்பட மாட்டார்கள்" என விளாசினார் கவாஸ்கர்.

பிம்பம் ஏற்படுத்த முயற்சி

பிம்பம் ஏற்படுத்த முயற்சி

ஆஸ்திரேலிய அணி பந்து சேத விவகாரத்திற்குப் பின் களத்தில் மிகவும் கவனமாக இருந்து வருகிறது. ரசிகர்கள் மத்தியில் ஆஸ்திரேலியா என்றால் தோன்றும் கெட்ட பெயரை மாற்ற முயற்சித்து வருகிறது. அதன் ஒரு வெளிப்பாடாகவே, கோலியை கலாய்த்து ஆஸ்திரேலியா பரிதாபம் என்பது போன்ற பிம்பத்தை ஏற்படுத்த முயற்சித்துள்ளார் லாங்கர்.

Story first published: Tuesday, December 11, 2018, 9:35 [IST]
Other articles published on Dec 11, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+