Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கங்குலி பிசிசிஐ தலைவர் ஆகப் போகிறாரா?.. இது நடக்குமா? நடக்காதா?

Recommended Video

கங்குலி பிசிசிஐ தலைவர் ஆகப் போகிறாரா?...இது நடக்குமா...நடக்காதா?- வீடியோ

மும்பை : முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கங்குலி, பிசிசிஐ தலைவராக வரப் போகிறார் என்ற செய்தி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பரவி வருகிறது.

கங்குலி தலைவராக போட்டியிட வாய்ப்புள்ளது என்பது உண்மைதான் என்றாலும், அவர் உடனடியாக தலைவராவது சாத்தியமா? இல்லையா? இந்த செய்தியின் பின்னணி என்ன என்பதைப் பார்ப்போம்.

பிசிசிஐ நிர்வாகத்தில் ஏற்பட்ட குழப்பங்களையும், சர்ச்சைகளையும் முடிவுக்கு கொண்டு வரும் வகையில் உச்சநீதிமன்றம் அமைத்த லோதா கமிட்டி, தன் பரிந்துரைகளை நீதிமன்றத்தில் அளித்துள்ளது. அதில் பல பரிந்துரைகளை நீதிமன்றம் ஏற்றுள்ளது. அதில் பிசிசிஐ தலைவர் பதவிக்கு சில புதிய விதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கங்குலிக்கு தகுதி உண்டு

கங்குலிக்கு தகுதி உண்டு

அதன்படி, ஏற்கனவே குறிப்பிட்ட காலம் வரை சில பதவிகளை வகித்தவர்கள், பிசிசிஐ தலைவர் பதவிக்கு போட்டியிட முடியாது. வேறு யார் தலைவர் பதவிக்கு போட்டியிட தகுதி பெறுகிறார்கள் என பார்க்கும்போது, அதில் கங்குலி தான் முதல் இடம் பிடிக்கிறார்.

இரண்டு ஆண்டுகள் வரை வாய்ப்பு

இரண்டு ஆண்டுகள் வரை வாய்ப்பு

தற்போது, மூன்றாவது முறையாக பெங்கால் கிரிக்கெட் அமைப்பின் தலைவராக இருக்கும் கங்குலி, பிசிசிஐ-இன் உள் அமைப்புகளான டெக்னிகல் கமிட்டி, கிரிக்கெட் ஆலோசனை குழு (CAC), ஐபிஎல் ஆட்சி மன்றக்குழு (IPL Governing Council) உள்ளிட்ட பதவிகளிலும் இருக்கிறார். இதுவரை நான்கு வருடங்கள் அவர் பிசிசிஐ நிர்வாகியாக இருக்கும் நிலையில், புதிய விதிகளின்படி கங்குலி மேலும் இரண்டு ஆண்டுகள் நிர்வாகியாக இருக்கலாம். எனவே, அவர் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வென்றால், இரண்டு ஆண்டுகள் வரை தலைவராக இருக்கலாம். அதன்பின், பதவி விலக நேரிடும்.

பிசிசிஐ-க்கு கங்குலி தேவை

பிசிசிஐ-க்கு கங்குலி தேவை

தற்போதுள்ள சூழ்நிலையில் உச்சநீதிமன்றத்தின் கட்டுப்பாட்டில் தான் பிசிசிஐ உள்ளது. இதனால், பிசிசிஐ நிர்வாகம் மீது கரும்புள்ளி விழுந்துள்ளது. லோதா கமிட்டியின் பரிந்துரைகள் படி மாற்றங்களை செய்தால் மட்டுமே பிசிசிஐ மீண்டும் தனித்து இயங்க முடியும். கங்குலி போன்ற ஒரு நம்பகமான நபரை தலைவர் பதவியில் அமர வைத்தால், நீதிமன்றம் மட்டுமின்றி மாநில கிரிக்கெட் அமைப்புகளின் ஆதரவு, ஐசிசி-இன் ஆதரவு, அரசு ஆதரவு என அனைத்து தரப்பு ஆதரவையும் பெற முடியும். எனவே, பிசிசிஐ-இன் முக்கிய நிர்வாகிகள் கங்குலியை தலைவராக்கும் முயற்சியில் இருப்பதாக தெரிகிறது.

கங்குலி ஒப்புக் கொள்வாரா?

கங்குலி ஒப்புக் கொள்வாரா?

மற்றவர்கள் நினைத்தாலும் கங்குலி தலைவராக தயாராக இருக்கிறாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. கங்குலியைப் பொறுத்தவரை, தலைவர் பதவியில் போட்டியிட வேண்டுமென்றால் பெங்கால் கிரிக்கெட் அமைப்பின் தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டும். எனவே, பிசிசிஐ தலைவர் பதவிக்கு வேறு யாரும் போட்டியிடவில்லை என தெரிந்தால் தான் அவர் போட்டியிட ஒப்புக் கொள்வார் என சிலர் தெரிவிக்கின்றனர்.

ஒரு காலத்தில் தடுமாறி வந்த இந்திய கிரிக்கெட் அணியை, உலகின் முன்னணி அணியாக மாற்றிக் காட்டிய கேப்டன் கங்குலி, பிசிசிஐ தலைவராக வேண்டும் என்பதே ரசிகர்களின் எண்ணம்.

Story first published: Monday, August 13, 2018, 8:00 [IST]
Other articles published on Aug 13, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+