ரவி சாஸ்திரி கிட்ட காலைல இன்டர்வியூ பண்ணாதீங்க.. கங்குலி செம கலாய்!
Recommended Video

ரவி சாஸ்திரி கிட்ட காலைல இன்டர்வியூ பண்ணாதீங்க...கங்குலி கலாய்!- வீடியோ
டெல்லி : ஒரு இணைய நிகழ்ச்சியில் ரவி சாஸ்திரி, தான் மேனேஜராக இருந்த போது, 2007 வங்கதேச பயணத்தில் கங்குலி தாமதமாக வந்ததால், பேருந்தை முன்னதாகவே கிளம்பிச் சென்றது என தெரிவித்திருந்தார்.
அதே நிகழ்ச்சியில் பங்கேற்ற கங்குலியிடம் இது பற்றி கேட்ட போது, ரவி சாஸ்திரியை காலை நிகழ்ச்சிக்கு அழைக்காதீர்கள், அவருக்கு என்ன பேசினோம் என்பதே நினைவில் இருக்காது, என கலாய்த்து இருக்கிறார். ரவி சாஸ்திரி கூறியது போன்ற சம்பவம் நடைபெறவில்லை என்றும் கூறினார்.

இணைய நிகழ்ச்சியான ப்ரேக்பாஸ்ட் வித் சாம்பியன்ஸ் என்ற நிகழ்ச்சியில் பேட்டி கொடுத்தார் கங்குலி. அந்த நிகழ்ச்சியில், முன்பு பங்கேற்ற ரவி சாஸ்திரி, கங்குலியின் தாமதமான வருகை குறித்து பேசியதை குறிப்பிட்டு கங்குலியிடம் விளக்கம் கேட்டனர்.
அதற்கு பதிலளித்த கங்குலி, “அவரை காலை நேரத்தில் பேட்டி எடுக்காதீர்கள். அவருக்கு என்ன பேசினோம் என்பதே நினைவில் இருக்காது. அவரை பார்த்தால், ப்ரேக்பாஸ்ட் நிகழ்ச்சியில், இதுவரை நடைபெறாத ஒரு சம்பவத்தை பற்றி நீங்கள் என்ன கூறினீர்கள் என கேட்பேன். இதை அவர் எங்கே எடுத்தார் என தெரியவில்லை. ஆனால், அவரை காலையில் பேட்டி எடுக்காதீர்கள். மாலையில் எடுங்கள். அப்போது அவர் விஷயங்களை நன்றாக நினைவு கூர்வார்” என கூறினார்.
இதற்கு முன் ரவி சாஸ்திரி இந்த நிகழ்ச்சியில் பேசிய போது, “ஒழுக்கம் ஒரு சிறந்த பழக்கம். அதை விட்டுக் கொடுக்கவே முடியாது. உங்களை எங்காவது அழைத்தால், அப்போது ஒழுக்கம் என்பது நேரம் தவறாமை தான். அதனால் தான் எங்கள் அணியில் நேரம் தவறாமை மிகவும் முக்கியம். பேருந்து 9 மணிக்கு கிளம்புகிறது என்றால், அது கிளம்ப வேண்டும். ஒரே ஒரு முறை தான் நான் பேருந்தை முன்னதாகவே எடுக்க நேர்ந்தது. வங்கதேச சுற்றுப் பயணத்தில் நான் முதன்முறையாக மேனேஜராக பதவியேற்ற போது தான் அது” என்றார்.
அந்த சம்பவம் பற்றி கூறுகையில், “நாங்கள் ஒன்பது மணிக்கு கிளம்ப வேண்டும். மணி ஒன்பது ஆகிவிட்டது. நான் கிளம்பலாம் என கூறினேன். ஆனால், பின்னால் இருந்தவர்கள் தாதா (கங்குலி) வரவில்லை என கூறினார்கள். நான், “தாதா தனியாக வந்து கொள்வார். நாம் செல்லலாம்” என கூறினேன். அதன் பின் நாங்கள் எப்போது பயிற்சிக்கு கிளம்பினாலும், கங்குலி பத்து நிமிடம் முன்னதாகவே வந்துவிடுவார்” என்றார்.
Story first published: Monday, August 6, 2018, 10:50 [IST]
Other articles published on Aug 6, 2018


Click it and Unblock the Notifications