சேவாக் மாதிரி ஜீனியஸ் கூட அந்த பையனை கம்பேர் பண்ணாதீங்க.. அழுத்தி சொல்லும் கங்குலி
ராஜ்கோட் : இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் இடையே ஆன முதல் டெஸ்டில் சதம் அடித்த ப்ரித்வி ஷா இந்திய கிரிக்கெட் உலகையே அதிர வைத்துள்ளார்.
பலரும் அடுத்த சச்சின், அடுத்த சேவாக் என அவரை புகழ்ந்து வருகிறார்கள். அதில் பலர் சேவாக் பெயரையே குறிப்பிடுகிறார்கள்.
ஆனால், கங்குலி சேவாக் உடன் அவரை ஒப்பிட வேண்டாம் என வலியுறுத்தி கூறியுள்ளார்.

சேவாக் உடல் மொழி
இந்திய அணியின் முன்னாள் துவக்க வீரர் சேவாக் அதிரடி ஆட்டக்காரர். எந்த போட்டியிலும், எந்த சூழ்நிலையிலும் பந்தை விளாசுவதில் தான் ஆர்வமாக இருப்பார் சேவாக். அவரது உடல் மொழியும் தனித்துவம் வாய்ந்தது. எதையும் அசராமல் அணுகுவார்.

ஏன் சேவாக்குடன் ஒப்பீடு?
ப்ரித்வி ஷாவும் துவக்க வீரராக களம் இறங்குகிறார். இவரது உடல் மொழியும் எதையும் கண்டு அசரமாட்டேன் என்பது போல தான் இருக்கிறது. ஆனால், சேவாக் போல பந்தை விளாசி ரன் குவிக்காவிட்டாலும், பந்தின் போக்கிற்கு ஏற்ப பவுண்டரி அடிக்கிறார். சச்சினும் பந்தின் போக்கிற்கு ஏற்ப தட்டி விட்டு பவுண்டரி அடிப்பார். ஆனால், ப்ரித்வி ஷாவின் ஸ்ட்ரைக் ரேட் சேவாக் போல அதிகமாகவே இருந்தது.

சேவாக் ஜீனியஸ்
இதையடுத்து தான் "அடுத்த சேவாக்" என சுரேஷ் ரெய்னா உட்பட ஏராளமானோர் நேற்று வலை தளத்தில் கருத்து கூறி இருந்தனர். அதை பற்றி பேசிய கங்குலி, "அவரை சேவாக்குடன் ஒப்பிடாதீர்கள். சேவாக் ஒரு முழுமையான ஜீனியஸ். ப்ரித்வி உலகம் முழுவதும் சென்று வரட்டும். அவர் நிச்சயம் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாபிரிக்காவில் ரன் குவிப்பார். ஆனால், அவரை சேவாக்குடன் ஒப்பிட வேண்டாம்" என கூறினார்.

எத்தனை அறிமுக சதங்கள்!!
மேலும், "டெஸ்ட் அறிமுகத்தில் சதம் கிடைப்பது அற்புதமான விஷயம். அவர் ரஞ்சி தொடர், துலீப் தொடர் மற்றும் இந்தியாவுக்காக ஆடும் போதும் அறிமுக போட்டியில் சதம் அடித்துள்ளார். இது அற்புதம்" என இளம் ப்ரித்வி ஷாவை புகழ்ந்துள்ளார்.


Click it and Unblock the Notifications