Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நல்லாத்தான் ஆடுனாரு.. ஆனா விஜய் ஷங்கருக்கு வாய்ப்பு கிடைக்காது.. கங்குலி சொல்றது உண்மை தானோ?

Recommended Video

விஜய் ஷங்கருக்கு உலக கோப்பையில் வாய்ப்பு கிடைக்காது : கங்குலி கருத்து- வீடியோ

மும்பை : இந்திய அணியில் சமீபத்தில் வாய்ப்பு பெற்று ஆஸ்திரேலிய தொடரில் ஒருநாள் போட்டிகளில் அறிமுகமானார் விஜய் ஷங்கர்.

ஆஸ்திரேலியா ஒருநாள் தொடரில் அவரை நிரூபிக்க சரியான வாய்ப்பு கிடைக்காமல் இருந்தது. எனினும், நியூசிலாந்து டி20 தொடரில் பொறுப்பாக ஆடி நல்ல பெயர் எடுத்தார் அவர்.

வாய்ப்பு கிடைக்காது

வாய்ப்பு கிடைக்காது

எனினும், கங்குலி கூறுகையில் விஜய் ஷங்கரின் பேட்டிங் நன்கு முன்னேறி உள்ளது. ஆனால், அவர் உலகக்கோப்பைக்கு செல்ல மாட்டார் என கூறினார். அவர் ஏன் உலகக்கோப்பை அணியில் தேர்வாக மாட்டார் என கங்குலி கூறவில்லை.

பரிசோதித்து பார்க்க வேண்டும்

பரிசோதித்து பார்க்க வேண்டும்

அதே சமயம், இளம் வீரர்கள் ரிஷப் பண்ட், கலீல் அஹ்மது, விஜய் ஷங்கர் ஆகியோரை ஆஸ்திரேலியா டி20 மற்றும் ஒருநாள் தொடரில் பயன்படுத்தி பரிசோதித்து பார்க்க வேண்டும் என கூறினார் கங்குலி.

வாய்ப்பு உண்டு என்ற பிரசாத்

வாய்ப்பு உண்டு என்ற பிரசாத்

கங்குலி இப்படி கூறினாலும், தேர்வுக் குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் விஜய் ஷங்கர் உலகக்கோப்பை அணியில் இடம் பெற வாய்ப்புள்ளது என கூறியுள்ளார். ஆனால், கங்குலி கூறியது போல விஜய்க்கு அணியில் வாய்ப்பு கிடைப்பது கடினம் என்பதே உண்மை.

தற்காலிக இடம்

தற்காலிக இடம்

விஜய் ஷங்கர், ஹர்திக் பண்டியாவின் இடை நீக்கத்தால் தற்காலிகமாக அணியில் இடம் பிடித்தார். ஹர்திக் பண்டியா போலவே விஜய் ஷங்கர், மித வேகப் பந்துவீச்சாளர் மற்றும் பேட்ஸ்மேன் ஆக இருப்பார் என்றே அவரை அணியில் சேர்த்தனர்.

ஆல்-ரவுண்டர் இல்லை

ஆல்-ரவுண்டர் இல்லை

விஜய் ஷங்கர் பேட்டிங்கில் தன் திறமையை காட்டினாலும், பந்துவீச்சில் தனக்கு கிடைத்த சில வாய்ப்புகளில் பெரிதாக செயல்படவில்லை. எனவே, தற்போது ஆல்-ரவுண்டர் என்ற நிலையில் விஜய் ஷங்கர் பார்க்கப்படவில்லை.

மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள்

மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள்

விஜய் ஷங்கர் வெறும் பேட்டிங் மட்டுமே செய்வார் என்றால், மூன்றாவது இடத்தில் கோலி தொடங்கி, மிடில் ஆர்டரில் ஆட அம்பதி ராயுடு, தோனி, கேதார் ஜாதவ், தினேஷ் கார்த்திக், ரிஷப் பண்ட், ஹர்திக் பண்டியா என ஏற்கனவே இந்திய அணியில் பலர் வரிசையில் நிற்கிறார்கள்.

விஜய்க்கு வாய்ப்பு உண்டா?

விஜய்க்கு வாய்ப்பு உண்டா?

இவர்களை தாண்டி விஜய் ஷங்கர் இந்திய அணியில் நுழைவது கடினமே. ஒரு வேளை அடுத்து நடைபெற உள்ள ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் வாய்ப்பு பெற்று பந்துவீச்சு, பேட்டிங் இரண்டிலும் விஜய் கலக்கினால் உலகக்கோப்பை வாய்ப்பு கிடைக்கலாம்.

Story first published: Wednesday, February 13, 2019, 16:03 [IST]
Other articles published on Feb 13, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+