Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆசிய கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் மோதல் பற்றி கங்குலியின் கருத்து என்ன?

மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி ஆசிய கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் மோதல் பற்றி தன் கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

மேலும், கங்குலி ஆசிய கோப்பையில் இந்தியாவின் சாதகம், பாதகம் பற்றிய தன் எண்ணங்களை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்தியா இன்று ஹாங்காங் மற்றும் நாளை பாகிஸ்தான் அணிகளுடன் அடுத்தடுத்து விளையாட உள்ளது. இந்த சூழ்நிலையில் இந்திய அணி கங்குலி என்ன சொல்கிறார்?

தவான், ரோஹித் போதுமே!

தவான், ரோஹித் போதுமே!

இந்திய அணியில் விராட் கோலி இல்லாமல் இந்தியா களமிறங்க உள்ளது. ரோஹித் சர்மா கேப்டன் பொறுப்பில் இருக்கிறார். இது பற்றி கங்குலி கூறுகையில், "கோலி இந்திய அணியின் மிகப் பெரிய தூண். ஆனால், ஒருநாள் போட்டிகளில் பேட்டிங்கில் தவான், ரோஹித் இருவரும் போட்டிகளை வென்று கொடுப்பவர்கள். மேலும், விராட் இல்லாதது அணியின் திறமையைக் காட்ட கிடைத்த வாய்ப்பாகும்" என தெரிவித்தார்.

தோனிக்கு முக்கிய தொடர்

தோனிக்கு முக்கிய தொடர்

தோனி இங்கிலாந்து ஒருநாள் தொடரில் நிதானமாக ரன் குவித்தது விமர்சனத்துக்கு உள்ளானது. அதைப் பற்றி பேசிய கங்குலி, "இந்த ஆசிய கோப்பை தொடர் தோனிக்கு முக்கியமானது. இங்கிலாந்தில் அவர் வழியை, மறந்து விட்டது போல ஆடினார். இப்போது அவர் தேர்வாளர்களுக்கு தான் ரன்களை வேகமாகவும் அடிப்பேன் என காட்ட வேண்டும். அவர் தன் அடித்து ஆடும் திறமையை மீண்டும் பயன்படுத்த வேண்டும்" என கூறினார்.

ரிஷப் பண்ட் ஏன் இல்லை?

ரிஷப் பண்ட் ஏன் இல்லை?

ரிஷப் பற்றி பேசிய கங்குலி, "ஆசிய கோப்பை அணி, ரிஷப் பண்ட் ஓவல் டெஸ்டில் சதம் அடிப்பதற்கு முன்பே எடுக்கப்பட்டது. எனினும், அவர் ஆசிய கோப்பை இந்திய அணியில் இல்லாதது எனக்கு ஆச்சரியமாக உள்ளது. அவர் ஒருநாள் போட்டிகளுக்கு தயாராகவே உள்ளார்" என தன் கருத்தை கூறினார்.

இந்தியா பாகிஸ்தான் மோதல்

இந்தியா பாகிஸ்தான் மோதல்

இந்தியா பாகிஸ்தான் மோதல் பற்றியும் தன் கருத்துக்களை கூறி உள்ளார். "இந்தியா பாகிஸ்தான் மோதல்களில் கடந்த 10 ஆண்டுகளாகவே இந்தியா தான் ஆதிக்கம் செலுத்தி வந்தது, எனினும், சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் பாகிஸ்தான் வென்றதில் இருந்து இது மாறியுள்ளது. என்னை பொறுத்தவரை இது ஒரு 50-50 மோதல். இந்தியா, பாகிஸ்தான் மோதும் புதன்கிழமை போட்டியின் வெற்றி தோல்வி தான் இந்த ஆசிய கோப்பை தொடரை நிர்ணயிக்கும். எனினும், ஒரு போட்டியின் வெற்றி என்பதை விட ஆசிய கோப்பையை வெல்வதே முக்கியம்" என கூறியுள்ளார் கங்குலி.

Story first published: Tuesday, September 18, 2018, 15:09 [IST]
Other articles published on Sep 18, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+