கோலி இல்லைனா என்ன.. இந்திய அணி ஈசியா ஜெயிச்சுடும்.. உறுதியாக சொல்லும் கங்குலி
கொல்கத்தா: இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி, இந்திய அணி ஆசிய கோப்பையில் வெல்லும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஆசிய கோப்பை தொடர் இன்று தொடங்கி நடைபெற உள்ளது. இந்தியா, வரும் 18 மற்றும் 19ஆம் தேதிகளில் ஹாங்காங் மற்றும் பாகிஸ்தான் அணியை சந்திக்கிறது.
கோலி இல்லாத நிலையில், ரோஹித் சர்மா அணிக்கு தலைமை ஏற்றுள்ளார். கங்குலி, கோலி இல்லாத நிலையிலும் இந்திய அணி வெல்லும் என கூறி உள்ளார்.

இங்கிலாந்தை விடுங்க
கங்குலி கூறுகையில், இங்கிலாந்தில் இந்தியா தோல்வி அடைந்தது. ஆனால், குறைந்த ஓவர் போட்டிகளில் இந்தியா எப்போதுமே மேலே தான் இருக்கும். எனவே, ஆசிய கோப்பையில் இந்திய அணி நன்றாக செயல்படும் என தெரிவித்தார்.

ரோஹித் நல்ல கேப்டன்
மேலும் கூறுகையில், ரோஹித் சர்மா நல்ல கேப்டன். ஒரு கேப்டனாக நல்ல ரெக்கார்ட் வைத்துள்ளார். எனவே, இந்த முறை அவர் நன்றாக செயல்படுவார் என்றே நினைக்கிறேன் என நம்பிக்கை தெரிவித்தார் கங்குலி.

விராட் இல்லாத அணி
கோலி இல்லாதது இந்திய அணிக்கு பாதிப்பா? இல்லையா? என்ற விவாதம் உள்ள நிலையில் கங்குலி அதை மறுத்துள்ளார். கோலி இல்லாத போதும், இப்போதுள்ள இந்திய அணி வலுவாகவே உள்ளது. அவர் இல்லாமலேயே, இந்திய அணி இந்த தொடரை வெல்லும் என உறுதியாக கூறினார்.

பாகிஸ்தானுக்கு சாதகமா?
ஐக்கிய அரபு நாட்டில் பாகிஸ்தான் பல போட்டிகளில் ஆடியிருப்பதால், அந்த அணி சொந்த நாடு போன்ற உணர்வுடன் ஆடும் என கூறப்படுகிறது. இதை பற்றி பேசிய கங்குலி, அது உண்மை தான். ஆனால், இங்குள்ள சூழ்நிலைக்கும், இந்திய சூழ்நிலைக்கும் பெரிய வித்தியாசமில்லை. எனவே, இந்திய அணி இங்கே நன்றாக ஆடும் என கூறினார்.


Click it and Unblock the Notifications