Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கடந்த 5 வருடங்களில் சிறந்த விக்கெட் கீப்பர்னு கங்குலி சொன்னா மட்டும் இவருக்கு வாய்ப்பு கிடைச்சுருமா?

Recommended Video

சிறந்த விக்கெட் கீப்பர்னு கங்குலி சொன்னா மட்டும் வாய்ப்பு கிடைச்சுருமா?- வீடியோ

மும்பை: இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி இந்திய டெஸ்ட் அணியில் விக்கெட் கீப்பராக இருந்து, தற்போது ஓய்வில் இருக்கும் விரிதிமான் சாஹாவுக்கு ஆதரவாக பேசியுள்ளார்.

இந்திய டெஸ்ட் அணியில் தோனி 2014இல் ஓய்வு பெற்றதில் இருந்து சாஹா விக்கெட் கீப்பிங் பணியை செய்து வந்தார்.

இந்த ஆண்டு துவக்கத்தில் நடைபெற்ற தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான கேப் டவுன் டெஸ்டில் தான் சாஹா கடைசியாக ஆடினார்.

[நாங்க கெஞ்சலை.. எங்களோட கிரிக்கெட் ஆடணும்னு தான் சொல்றோம்.. இந்தியாவிடம் "கெஞ்சாமல்" கேட்கும் பாக்.]

கங்குலி ஆதரவுக் குரல்

கங்குலி ஆதரவுக் குரல்

பின்னர் தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக ஓய்வில் இருந்த அவர் சில மாதங்கள் முன்பு அதற்காக அறுவை சிகிச்சை மேற்கொண்டு இருக்கிறார். அதில் இருந்து மீண்டு வரும் அவருக்கு கங்குலி தன் ஆதரவை தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் சிறந்த விக்கெட் கீப்பர்

இந்தியாவின் சிறந்த விக்கெட் கீப்பர்

கங்குலி கூறுகையில், "சாஹா கிட்டத்தட்ட ஒரு வருடமாக அணியில் இல்லை. கடந்த 5-10 வருடங்களில் இந்தியாவின் சிறந்த விக்கெட் கீப்பர். அவர் சீக்கிரம் மீண்டு வருவார்" என கூறினார். "விக்கி" (WiKi) என்ற விக்கெட் கீப்பரை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ள நாவல் புத்தக வெளியீட்டு விழாவில் தான் கங்குலி இந்த கருத்தை கூறியுள்ளார்.

இடத்தை பிடித்த ரிஷப் பண்ட்

இடத்தை பிடித்த ரிஷப் பண்ட்

சாஹா இல்லாத நிலையில், தினேஷ் கார்த்திக், பார்த்திவ் பட்டேல் ஆகியோர் வாய்ப்பு பெற்றனர். எனினும், இவர்கள் இந்திய அணி நிர்வாகத்தை திருப்திபடுத்தவில்லை. இதையடுத்து இளம் வீரர் ரிஷப் பண்ட் வாய்ப்பு பெற்றார். அவர் ஐந்து போட்டிகளில் ஒரு சதம், இரண்டு அரைசதம் அடித்து டெஸ்ட் அணியில் தன் இடத்தை கெட்டியாக பிடித்துக் கொண்டுள்ளார்.

மீண்டும் அணியில் இடம் பிடிப்பது கடினமே

மீண்டும் அணியில் இடம் பிடிப்பது கடினமே

சாஹா விக்கெட் கீப்பிங்கில் சிறந்து விளங்கினாலும், பேட்டிங்கில் பெரிய அளவில் ஜொலிக்கவில்லை. அடுத்து இந்திய அணி ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் உள்ளிட்ட கிரிக்கெட் தொடர்களில் ஆடுகிறது. அதற்கான டெஸ்ட் அணியில் ரிஷப் பண்ட் மற்றும் பார்த்திவ் பட்டேல் விக்கெட் கீப்பராக இடம் பெற்றுள்ளனர். பண்ட் ஆட முடியாத பட்சத்தில் பார்த்திவ் வாய்ப்பு பெறுவார். இளம் வீரர் பண்ட் சிறப்பாக ஆடி வரும் நிலையில், 34 வயதாகும் சாஹா மீண்டும் இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடிப்பது கடினமே, கங்குலியின் ஆதரவு இருந்தாலும்...

Story first published: Monday, November 12, 2018, 17:35 [IST]
Other articles published on Nov 12, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+