கங்குலியை வில்லனாக மாற்ற முயற்சி? களத்தில் குதித்த தாதா ரசிகர்கள்!! தல தளபதியை மிஞ்சிய மோதல்
மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் தலை சிறந்த கேப்டன்களில் ஒருவர் தான் கங்குலி. இந்திய அணி சூதாட்ட புகாரில் சிக்கி, சின்னாப்பின்னமாக மாறிய போது, அதனை மீட்டு கொண்ட வந்தவர்.
Recommended Video
கங்குலியை கொல்கத்தாவின் இளவசரன், ஆப் சைடின் கடவுள், தாதா அதாவது பெங்காலியில் அண்ணன் என்று ரசிகர்கள் அன்புடன் அழைப்பார்கள்.
அப்படி பட்ட கங்குலி மீது 2k கிட்ஸ் பழி சுமத்தினால், கங்குலி ரசிகர்கள் சும்மா விடுவார்களா..? நேற்று சமூக வலைத்தளத்தில் அது தான் நடந்தது

விராட் கோலி ரசிகர்கள்
பொதுவாக சமூக வலைத்தளத்தில் தல, தளபதி ரசிகர்கள் தான் யார் பெஸ்ட் என்று மோதி கொள்வார்கள். அப்படி அவர்கள் மோதினால், டிவிட்டரில் அனல் பறக்கும். உலக அளவில் டிரெண்டிங்கில் இடம் பிடிக்கும். ஆனால், அதையே மிஞ்சியது நேற்று விராட் கோலி, கங்குலி ரசிகர்களிடையே நடைபெற்ற மோதல்.

விமர்சனம்
விராட் கோலி ஒரு சிறந்த கேப்டன் என்றும், அவரை கங்குலி பழிவாங்கிவிட்டதாகவும் கூறி, கங்குலியை கோலி ரசிகர்கள் கடுமையாக விமர்சித்தனர். விராட் கோலிக்கான உரிய மரியாதையை கங்குலி வழங்க வில்லை என்றும், கங்குலி பொய் சொல்லிவிட்டதாக கூறியும் கோலி ரசிகர்கள் கங்குலிக்கு எதிராக டிரெண்ட் செய்தனர்.

கங்குலி ரசிகர்கள் பதிலடி
இதனால் அதிருப்தி அடைந்த கங்குலி ரசிகர்கள், விராட் கோலிக்கு எதிராக பேச தொடங்கினர். விராட் கோலி தான் அரசியல் செய்து பல திறமையான வீரர்களை அணியை விட்டு தூக்கியதாகவும், கங்குலி பல ஜாம்பவான் வீரர்களை உருவாக்கியவர் என்றும் கருத்து தெரிவித்தனர். கங்குலி ஆதரவாக நேஷன் வித் தாதா என்ற ஹேஸ்டேக்கில் கங்குலி ரசிகர்கள் டிரெண்ட் செய்தனர்.

சரமாரி புகார்
மேலும் சிலர், விராட் கோலி சூழ்ச்சி செய்து பயிற்சியாளராக இருந்த கும்ப்ளேவை அணியிலிருந்து நீக்கியதாகவும், தற்போது அவர் சரியாக செயல்படவில்லை என்று நீக்கினால், கோலி ரசிகர்களுக்கு கோபம் வருவதாகவும் தெரிவித்தனர். இதற்கு விராட் கோலி ரசிகர்கள், கங்குலியையும் கேப்டன் பதவியை விட்டு அப்போதைய பி.சி.சி.ஐ. நிர்வாகிகள் தூக்கியதாகவும், தற்போது அதே தவறை கங்குலியும் செய்வதாகவும் தெரிவித்தனர்.

டிரெண்டிங்
மேலும் சிலர், கங்குலி ஜெய்ஷாவின் பொம்மையாக செயல்படுவதாக விமர்சித்தனர். அதற்கு கங்குலி ரசிகர்கள், இந்திய அணியின் பயிற்சியாளர் தாம் சொல்வதை தான் கேட்க வேண்டும் என்று விராட் கோலி கூறியதாக பதிலடி தந்தனர். இப்படி இருவரின் ரசிகர்களும் போட்டி போட்டு ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்தனர்.


Click it and Unblock the Notifications