உலக கோப்பையை இந்தியாவுக்கு வென்று கொடுத்த கிரிஸ்டன்..! கிளப் அணிக்கு பயிற்சியாளராக நியமனம்..!!
கார்டிப்: இந்தியாவிற்கு உலக கோப்பையை வென்று கொடுத்த கேரி கிரிஸ்டன், இங்கிலாந்தில் உள்ள கிளப் அணிக்கு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
யாரும் எதிர்பாராத வகையில் 2011ம் ஆண்டு இந்தியா உலக கோப்பையை வென்று சாதனை படைத்தது. அப்போது இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்தவர் கேரி கிரிஸ்டன். அவரது பயிற்சியின் கீழ் சாம்பியன் ஆனதால், கிரிஸ்டன் மீது வீரர்கள் மத்தியில் நல்ல மரியாதை உண்டு.
தென் ஆப்ரிக்காவை சேர்ந்த கேரி கிரிஸ்டன் தற்போது இங்கிலாந்தில் உள்ள ஒரு அணிக்கு பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அந்நாட்டின் கார்டிப் நகரத்தை மையமாகக்கொண்ட தி ஹன்ரெட் என்ற ஒரு அணி செயல்பட்டு வருகிறது.

பயிற்சியாளராக நியமனம்
இந்த அணிக்கு தான் தற்போது பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் கேரி கிரிஸ்டன். இந்திய அணிக்கும் பயிற்சியாளர் தேடுதலில் அவர் முன்னிலையில் இருந்தார். ஆனால், அதிலிருந்து விலகி இங்கிலாந்தில் உள்ள ஒரு கிளப் அணிக்கு பயிற்சியாளராக சேர்ந்திருப்பது ஒரு இழப்பாகவே இந்திய ரசிகர்களுக்கு கருதுகின்றனர்.

பிரபல தொடர்
இங்கிலாந்தில் ஹன்ரெட் என்னும் ஒரு கிரிக்கெட் தொடர் நடக்க உள்ளது. அதில் பல்வேறு நகரங்களைச் சேர்ந்த அணிகள் கலந்து கொண்டு விளையாடுவது வழக்கம். அதில் உலகின் முன்னணி கிரிக்கெட் வீரர்களும் முன்னணி கிரிக்கெட் பயிற்சியாளர்களும் பங்கேற்பார்கள் என்று தெரிகிறது.

தகவல்கள்
தற்போது கேரி கிரிஸ்டன் கார்டிப் அணிக்கு பயிற்சியாளராக நியமிக்கப் பட்டார். ஷேன் வார்னே லார்ட்ஸ் ஹன்ரெட் அணிக்கும் ஜெயவர்த்தனே மற்றொரு அணிக்கும் பயிற்சியாளராக செயல்பட போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

2 வருடங்கள்
கேரி கிரிஸ்டன் ஏற்கனவே இந்தியாவின் ஐபிஎல் தொடரில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு பயிற்சியாளராக உள்ளார். 2 ஆண்டுகளாக அந்த அணியில் இவர் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. எப்படிப்பார்த்தாலும் அவர் பிசிசிஐயின் விதிப்படி இந்தியாவிற்கு பயிற்சியாளராக முடியாது என்பது தான் தற்போதைய நிலைமை.


Click it and Unblock the Notifications