Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் பயிற்சியாளர் மாற்றம்

பெங்களூரு : ஐபில் போட்டிகளில் இதுவரை கோப்பையை வென்றிடாத ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அடுத்த தொடரில் கோப்பையை வெல்லும் முனைப்புடன் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து டேனியல் வெட்டோரி நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக புதிய தலைமை பயிற்சியாளராக தென்னாப்ரிக்காவின் கேரி கிர்ஸ்டன் தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த ஐபில் தொடரில் ஆர்சிபி அணியின் பேட்டிங் பயிற்சியாளராக மட்டுமே பணியாற்றினார்.

Gary Kirsten appointed as head coach for RCB


வெட்டோரி கடந்த 2013ஆம் ஆண்டு முதல் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு பயிற்சி அளித்து வருவது குறிப்பிடத்தக்கது. 2019 ஆம் ஆண்டு ஐபில் போட்டிக்கான அணிக்கு கிர்ஸ்டன் பயிற்சியளிப்பார். இவரது பயற்சியின் கீழ் தான் இந்திய அணி 2011ஆம் ஆண்டு உலககோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.

இதுபற்றி கிர்ஸ்டன் கூறியதாவது,கடந்த ஆண்டு பெங்களூரு அணிக்கு வெட்டோரி தலைமையில் பேட்டிங் பயிற்சியாளராக பணியாற்றினேன். இப்போது தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்பதில் மகிழ்ச்சி அடைவதாகவும் அணியை வெற்றி பாதைக்கு அழைத்து செல்ல தேவையான முயற்சிகளை எடுப்பதாகவும் கூறினார்.

வெட்டோரி இதுகுறித்து கூறுகையில்,ஒரு வீரராகவும்,பயிற்சியாளராகவும் அணிக்கு எனது பங்களிப்பை அளித்துள்ளேன். பெங்களூரு அணிக்கு எனது வாழ்த்துக்கள் என்று கூறினார்.

உலகின் தலை சிறந்த வீரர்களை கொண்டிருந்த போதும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியால் கோப்பையை வெல்ல முடியாமல் இருப்பது அவர்களின் துரதிர்ஷ்டமே..!





Story first published: Friday, August 31, 2018, 13:48 [IST]
Other articles published on Aug 31, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+