மும்பை : நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் கவுதம் கம்பீர் பயிற்சியாளராக செயல்பட்ட நிலையில் இந்திய அணி படுதோல்வியை தழுவியது. இந்த சூழலில் கம்பீர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தமது பதவியை காப்பாற்றிக் கொள்ள கம்பீர் தேவையில்லாத அரசியலை செய்து வருகிறார்.
இந்திய அணி ஏன் சரியாக செயல்படவில்லை என்று கேள்வி கேட்டதற்கு தனது கையாளாகாத தனத்தை ஒப்புக் கொள்ளாத கம்பீர் வீரர்கள் மனைவி மற்றும் குடும்பத்தினர் மீது புகார் தெரிவித்தார். இதனால் பிசிசிஐ வீரர்களின் குடும்பத்தினர் வந்து செல்வதற்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது.

இந்த நிலையில் அணியில் நடக்கும் விஷயத்தை இந்திய அணியின் இளம் நட்சத்திர வீரர் சர்பராஸ் கான் பத்திரிக்கையாளர்களிடம் சொல்வதாக கம்பீர் பிசிசிஐயிடம் குற்றச்சாட்டு ஒன்றை வைத்து இருக்கிறார். இது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நடந்து முடிந்த ஆஸ்திரேலியா தொடரில் சர்பராஸ் கான் ஒரு போட்டியில் கூட சேர்க்கப்படாத நிலையில் அதற்கு காரணம் இதுவாக தான் இருக்கும் என்று தற்போது தெரிகிறது.
எனினும் கம்பீரின் இந்த குற்றச்சாட்டுக்கு ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்கள். இந்திய அணி ஏன் சரியாக செயல்படவில்லை என்று காரணம் கேட்டால், அணியில் நடப்பதை சர்ஃபாஸ்கான் வெளியே சொல்கிறார் என்று கம்பீர் ஒரு இளம் வீரர் மீது பழியை சுமத்தி அவருடைய வாழ்க்கையே முடிக்க பார்ப்பதாகவும் ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்திய அணியில் இதுவரை டிராவிட் இருந்தபோது எந்த ஒரு அரசியலும் இல்லாத நிலையில் தற்போது கம்பீர் வந்த பிறகு பல பிரச்சனைகள் உருவாகிவிட்டதாக ரசிகர்கள் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள். சர்பராஸ் போன்ற திறமை வாய்ந்த வீரருக்கு வாய்ப்பு கொடுத்து, அவரை மேலே உயர்த்த வேண்டும் தவிர இப்படி பழி சுமத்தி அவருடைய கேரியருக்கே ஆபத்தை கம்பீர் ஏற்படுத்தி இருப்பதாக ரசிகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இது கம்பீரின் கீழ்த்தரமான செயல் என்றும் ரசிகர்கள் கடுமையாக கருத்துக்களை கூறியிருக்கிறார்கள்.தற்போது கம்பீர் சர்பராஸ்கான் மீது பழி சுமத்தி இருப்பதால் இனி சர்பராஸ்கான் இந்திய அணியில் சேர்க்கப்படுவது மிகவும் சந்தேகம்தான் என்று கருத்து தெரிவித்துள்ள கிரிக்கெட் ஆர்வலர்கள், இனி கம்பீர் இருக்கும் வரை சர்பராஸ்கான் அணியில் சேர்க்கப்பட மாட்டார் என்றும் தெரிவித்துள்ளனர்.