Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தண்ணீர் எடுத்து வரும் நிலை வந்துவிட்டதே.. சீக்கிரம் பழைய மாதிரி வாங்க.. ராகுலுக்கு கம்பீர் அறிவுரை

மும்பை : இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக இருந்த கே எல் ராகுல் தற்போது அந்தப் பதவியை இழந்து பிளேயிங் லெவனில் கூட இடம்பெறாத நிலை ஏற்பட்டுள்ளது.

கே எல் ராகுலின் இந்த நிலை குறித்து வருத்தமாக பேசியுள்ள கம்பீர் அவருக்கு சில அறிவுரைகளை வழங்கி இருக்கிறார். கம்பீரும் கேஎல் ராகுலும் ஐபிஎல் தொடரில் லக்னோ அணியில் ஒன்றாக பணியாற்றுகிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயமே.

தற்போது ராகுல் டெஸ்ட் தொடரில் தடுமாறி வருவது குறித்து கம்பீர் அளித்துள்ள பேட்டியை தற்போது பார்க்கலாம்.

நல்லது தான்

நல்லது தான்

கிரிக்கெட் விளையாடும் ஒவ்வொரு வீரருமே இது போன்ற ஒரு நிலையை கடந்து வருவார்கள். ஏதேனும் ஒரு வீரரை உங்களால் சொல்ல முடியுமா தொடக்கத்திலிருந்து இதுவரை அவர் ஒரே மாதிரியாக ரன்களை அடித்து ஜொலித்தார் என்று? சில சமயம் ஒவ்வொரு வீரர்களுக்கு இப்படி நடப்பது நல்லது. இது போன்ற விஷயங்கள் உங்கள் மனதை காயப்படுத்த வேண்டும். ஒரு விஷயம் உங்களை காயப்படுத்தினால் அது நிச்சயம் உங்களுக்கு நல்லது தான்.

அணியில் இல்லை

அணியில் இல்லை

உங்களுடைய இடத்தில் வேறு ஒரு வீரரை பார்க்கும் போதும் நீங்கள் விளையாடும் வீரர்களுக்கு தண்ணீர் பாட்டிலைக் கொண்டு கொடுக்கும் போதும் அந்த காயம் ஏற்படும். அதுவும் நீங்கள் ஒரு ஐபில் அணியின் கேப்டன் , ஐபிஎல் தொடரில் நான்கு ஐந்து சதங்கள் அடித்து இருக்கிறீர்கள். இவ்வளவு இருந்தும் உங்களால் டி20 அணியில் இடம் பெற முடியவில்லை. தற்போது டெஸ்ட் பிளேயிங் லெவனிலும் நீங்கள் இல்லை.

வாய்ப்பு

வாய்ப்பு

இனி கே எல் ராகுல் ஐபிஎல் தொடரை ஒரு வாய்ப்பாக கருதி தன்னுடைய பழைய பார்மை அவர் மீட்க வேண்டும். உங்களிடமிருந்து அணி என்ன எதிர்பார்க்கிறது. நாடு என்ன எதிர்பார்க்கிறது என்பதை புரிந்து கொண்டு அதன்படி விளையாட வேண்டும். ஐ பி எல் தொடரில் 600 ரன்களை குவிக்க வேண்டும் என்பது எந்த முக்கியமும் பயனும் இல்லை. நீங்கள் ஒரு 400, 500 ரன்கள் அடித்தால் கூட போதும்.

மீண்டும் கில்

மீண்டும் கில்

ஆனால் உங்கள் அணியின் வெற்றிக்காக அந்த ரன்கள் உதவி இருக்க வேண்டும் என்று கம்பீர் கூறியுள்ளார்.முதல் இரண்டு டெஸ்டில் சொதப்பியதால் மூன்றாவது டெஸ்டில் சுப்மன் கில்லுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று கடைசி டெஸ்டிலும் கே எல் ராகுலுக்கு பதில் சுப்மன் கில் தான் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. டெஸ்ட் கிரிக்கெட்டில் கே எல் ராகுல் கடைசியாக விளையாடிய பத்து இன்னிங்ஸில் ஒருமுறை கூட 25 ரன்களை தொடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, March 8, 2023, 16:15 [IST]
Other articles published on Mar 8, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+