ஐபிஎல் தொடரில் பெஸ்ட் கேப்டன் யார்? தோனியை சீண்டிய கவுதம் கம்பீர்.. என் தூக்கத்தை கெடுத்துவிட்டார்
மும்பை: ஐபிஎல் தொடரில் சிறந்த கேப்டன் யார் என்ற கேள்விக்கு தோனியை சீண்டும் விதமாக கவுதம் கம்பீர் பதில் அளித்துள்ளார்.
லக்னோ அணியில் மெண்டராக நியமிக்கப்பட்டுள்ள கவுதம் கம்பீர் தற்போது அதன் பணியை தொடங்கியுள்ளார்.
லக்னோ அணியின் பிளேயிங் லெவன், எந்த வெளிநாட்டு வீரர்களை பயன்படுத்துவது போன்ற யுத்தியை கம்பீர் வகுத்து வருகிறார்.

ஐபிஎல் அனுபவம்
லக்னோ அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள கே.எல்.ராகுல், ஏற்கனவே பேட்டிங் பயிற்சியை தொடங்கிவிட்டார். அடுத்த வாரம் முதல் லக்னோ அணி தங்களது பயிற்சியை தொடங்க உள்ளது. இந்த நிலையில், தனியார் தொலைக்காட்சிக்கு கவுதம் கம்பீர் தனது ஐபிஎல் அனுபவத்தை பற்றி பேசினார்.

தூங்கா இரவுகள்
அப்போது கவுதம் கம்பீரிடம் ஐபிஎல் தொடரில் சிறந்த கேப்டன் மற்றும் வீரர் யார் என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு கம்பீர் ரோகித் சர்மா தான் சிறந்த கேப்டன். கொல்கத்தா, மும்பை அணிகள் மோதும் போது, எனக்கு பல தூங்கா இரவுகளை பரிசளித்துவிட்டார். ரோகித் சர்மா போன்று எந்த கேப்டனும் எனக்கு நெருக்கடி தந்தது இல்லை.

ரோகித் பெஸ்ட்
வீரராக கேட்டால், அதற்கும் என் பதில் ரோகித் சர்மா தான். கிறிஸ் கெயில், டிவில்லியர்ஸ் போன்ற வீரர்களை விட ரோகித் தான் சிறந்த வீரர். ஐபிஎல் தொடரில் ரோகித் சர்மாவை விட வெற்றிக்கரமான கேப்டன், வீரர் என்று யாருமில்லை என்று கவுதம் கம்பீர் பதில் அளித்துள்ளார்.
Recommended Video

தோனி மீது வன்மம்
அதிக முறை மும்பை கோப்பையை வாங்கி இருந்தாலும், அதற்கு முன் அந்த பெருமையை பெற்ற அணி என்றால் அது தோனின் சிஎஸ்கே தான். தோனி மீதான வன்மத்தில் அவரது பெயரை கவுதம் கம்பீர் குறிப்பிடவே இல்லை. இதனால் தோனியை வம்பிழுக்கும் நோக்கில் ரோகித் சர்மா பேசி வருவதாக ரசிகர்கள் குற்றஞ்சாட்டியுளளனர்.


Click it and Unblock the Notifications