Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியாவுக்கு தோல்வி மேல் தோல்வி.. சாட்டையை எடுத்த பிசிசிஐ.. கம்பீர், ஸ்ரேயாஸ் ஐயருக்கு செக்

மும்பை: அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் இந்திய அணி சந்தித்த தொடர் தோல்விகள் குறித்து விசாரிக்க, தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயருடன் அவசர ஆலோசனைக் கூட்டத்தை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. இந்திய அணியின் இந்த மோசமான செயல்பாடு பிசிசிஐ நிர்வாகிகளிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையில் உள்ள பிசிசிஐ தலைமை அலுவலகத்தில், தற்போதைய ஜிம்பாப்வே தொடர் முடிந்தவுடன் இந்த உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து சுற்றுப்பயணங்களில் இந்திய அணி 6 டி20 போட்டிகளிலும், 2 ஒருநாள் போட்டிகளிலும் தோல்வியடைந்து பெரும் ஏமாற்றத்தை அளித்தது. இந்தத் தோல்விகளுக்கான பின்னணி காரணங்கள் குறித்துத் தீவிரமாக ஆராய பிசிசிஐ முடிவு செய்துள்ளது.

Gautam Gambhir and Shreyas Iyer summoned by BCCI for review meeting following England loss

இந்தக் கூட்டத்தில் டி20 கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர், இடைக்கால பயிற்சியாளர் வி.வி.எஸ். லக்ஷ்மன், தேர்வுக்குழுவினர் மற்றும் பிசிசிஐ மூத்த நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். 2027 ஒருநாள் போட்டி உலகக் கோப்பைத் தொடரைக் கருத்தில் கொண்டு, வெளிநாட்டு மண்ணில் அணியின் செயல்பாடு, வீரர்களின் தேர்வு முறை மற்றும் ஆட்ட வியூகங்கள் குறித்து இதில் விரிவாக விவாதிக்கப்பட உள்ளது.

இந்தக் கூட்டத்தில் உடனடி அதிரடி முடிவுகள் எதுவும் எடுக்கப்படாது என்றாலும், கம்பீர் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இருவருக்கும் சில எச்சரிக்கைகள் விடுக்கப்பட வாய்ப்புள்ளது. 2027 வரை ஒப்பந்தம் உள்ளதால் கம்பீரின் பதவிக்கு உடனடி ஆபத்து இல்லை என்றாலும், ஒருநாள், டி20 கிரிக்கெட்டில் அணியின் தொடர் சரிவு அவர் மீது அழுத்தத்தை அதிகரித்துள்ளது.

ஏற்கனவே டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி பெரும் சரிவை சந்தித்து உள்ளது. இப்படியே சென்றால் 2027 ஒருநாள் போட்டி உலகக்கோப்பையிலும் இந்திய அணி மோசமாக செயல்படுமோ என்ற அச்சம் உள்ளது. அதற்காகவே பிசிசிஐ கம்பீரை அழைத்துள்ளதாக கூறப்படுகிறது.

ஸ்ரேயாஸ், பும்ரா உள்பட 8 வீரர்கள் வெஸ்ட் இண்டீஸ் ODI தொடரில் ஆட மாட்டார்கள்.. பின்னணி என்ன?

ஸ்ரேயாஸ், பும்ரா உள்பட 8 வீரர்கள் வெஸ்ட் இண்டீஸ் ODI தொடரில் ஆட மாட்டார்கள்.. பின்னணி என்ன?

அதேபோல் டி20 அணியின் புதிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரின் அணுகுமுறை குறித்தும் கேள்விகள் எழுப்பப்படலாம் எனத் தெரிகிறது. அவருக்கும் இன்னும் சில தொடர்கள் வரை வாய்ப்பு வழங்கப்படலாம். 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகள் தொடரில் இந்தியா பதக்கம் வென்றால் அவருக்கான அழுத்தம் குறையும்.

Story first published: Saturday, July 25, 2026, 16:55 [IST]
Other articles published on Jul 25, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+