For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கம்பீருடன் இணையும் தமிழக ஜாம்பவான்.. இரட்டை சக்தியை பயன்படுத்தும் பிசிசிஐ?பலமாகும் பயிற்சியாளர் குழு

மும்பை : டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் முடிவடைந்த உடன் இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளர் நியமிக்கப்பட இருக்கிறார். இதற்கான பந்தயத்தில் கவுதம் கம்பீர் தான் முதலிடத்தில் இருப்பதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கான நேர்முகத் தேர்வில் கம்பீர் பங்கேற்று இருக்கிறார். இந்திய அணிக்கு தான் என்ன மாற்றங்களை செய்யப் போகிறேன் என்பது குறித்து கம்பீர் விரிவாக ஒரு பதிலையும் கொடுத்திருக்கிறார். இதற்கு முன்பாக மத்திய உள்துறை அமைச்சர் ஜெயிஷாவையும் கம்பீர் சந்தித்து பேசி இருக்கிறார்.

t20 world cup gambhir indian national cricket team cricket 20 2024

இதனால் கம்பீர்தான் அடுத்த தலைமை பயிற்சியாளர் என்று அனைவரும் உறுதி செய்து விட்டனர். இந்த நிலையில் நேர்முகத் தேர்வில் திடீரென்று தமிழக கிரிக்கெட் ஜாம்பவான் டபிள்யு வி ராமன் பங்கேற்றது ஒரு டெஸ்ட் ஆக அமைந்தது. இதனால் கம்பிருக்கு கடும் நெருக்கடி கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் டபுள் வி ராமன் நேர்முகத்தேர்வுக்கு பிறகு பேசுகையில் கம்பீர் ஒரு சிறந்த கேப்டனாக திகழ்ந்து இருக்கிறார்.

அவர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக வந்தால் நிச்சயம் நான் வரவேற்பேன் என்று கூறியிருந்தார். இதனால் பலரும் குழப்பம் அடைந்தனர். இந்த நிலையில் தான் தற்போது ஒரு புதிய தகவல் வெளியாக இருக்கிறது. அதன்படி கம்பீர் மற்றும் டபுள் வி ராமன் என இருவருமே பயிற்சியாளர் குழுவில் இடம் பெறப் போகிறார்கள்.

அதாவது கம்பீர் தலைமை பயிற்சியாளராக செயல்பட போகிறார். இந்திய அணியில் பேட்டிங் பயிற்சியாளராக இருக்க ராமனுக்கு தான் அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால் டபுள்யூ வி ராமனை அந்த பதவிக்கு கம்பீர்தான் அழைத்து இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.கம்பீர் 2013 ஆம் ஆண்டு இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டபோது டபுள்யூ ராமன் தான் கம்பீருக்கு பேட்டிங் ஆலோசகராக இருந்து அவரை மீண்டும் பழைய ஃபார்முக்கு மீட்டுக் கொண்டு வந்திருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் கே கே ஆர் அணியில் கம்பீர் கேப்டனாக இருந்த போது டபிள்யூ ராமன் பேட்டிங் பயிற்சியாளராகவும் செயல்பட்டு இருக்கிறார். இதனால் டபிள்யூ ராமன் பேட்டிங் பயிற்சியாளராக இந்திய அணிக்கு செயல்பட அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. டபிள்யு வி ராமன் ஏற்கனவே அண்டர் 19 இந்திய அணி போன்ற பல்வேறு கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளராக இருந்திருக்கிறார். இதனால் இளம் வீரர்களுக்கு பேட்டிங் தொடர்பாக ஏதேனும் சிக்கல் வந்தால் அதனை டபுள் யூ ராமன் தீர்ப்பார் என தெரிகிறது. எனினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Thursday, June 20, 2024, 6:02 [IST]
Other articles published on Jun 20, 2024
English summary
Gautam Gambhir and WV Raman could be part of coaching staff on indian cricket team கம்பீருடன் இணையும் தமிழக ஜாம்பவான்.. இரட்டை சக்தியை பயன்படுத்தும் பிசிசிஐ?பலமாகும் பயிற்சியாளர் குழு
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+